தென்னை விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையை திரும்பப் பெற்றது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்!

தென்னை விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கையை திரும்பப் பெற்றது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்!
Published on

மிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதியிட்ட ஒரு நடவடிக்கையின் மூலம், 'தென்னை நார் உடைத்தல் / டி-ஃபைபர் / பித் பதப்படுத்துதல் தொழில் (Coconut husk retting /de-fibreing / pith processing industry)' போன்றவற்றை ஆரஞ்சு வகை குறியீட்டின் கீழ் வகைப்படுத்தியது.

அப்பொழுது முதலே, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு தென்னை நார் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 10.11.2021 தேதியிட்ட இந்த நடவடிக்கையை திரும்பப் பெற்று, தென்னை நார் தொழிற்சாலைகளையும் அவற்றில் தொழில் புரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தென்னை நார் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களின் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்திக்காக குறு மற்றும் சிறிய வகை (MSME) தொழிற்சாலைகளை ஊக்குவிப்பதற்கும் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் தென்னை நார் தொழிற்சாலைகள் கணிசமான பங்களிப்பை அளித்து வருவதாலும், 'தென்னை நார் தயாரித்தல் / டி-ஃபைபர் / பித் பதப்படுத்துதல் தொழில் (Coconut husk retting / de - fibreing / pith processing industry)' ஆகியவற்றை ஆரஞ்சு வகைக் குறியீட்டின் கீழ் வகைப்படுத்திய 10.11.2021 தேதியிட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கை எண். T2 / TNPCB / F.13367 / 2021 திரும்பப் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com