அதிகமாக மீன்பிடிப்பதால் இவ்வளவு பாதிப்புகளா? 

Impact of Overfishing
Impact of Overfishing

உலகில் உள்ள பெருங்கடல்கள் பறந்து விரிந்திருக்கும் அதிசயங்களின் ஒன்றாக மட்டுமில்லாமல், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளன. இத்தகைய பெருங்கடலின் தன்மையை சீர்குலைக்கும் செயல்களில் ஒன்று அதிகப்படியான மீன் பிடித்தல். இந்த ஆபத்தான நடைமுறை கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. இந்தப் பதிவில் அதிகப்படியான மீன் மீன்பிடித்தலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்க்கலாம். 

குறுகிய காலத்தில் அதிகப்படியான மீன்களைப் பிடிக்கும்போது அது மீன்களின் எண்ணிக்கையில் விரைவான வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இதனால் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் சமூகங்கள் நீண்டகால விளைவுகளை சந்திக்கின்றன. அதிகப்படியான மீன்பிடித்தலின் சில முக்கிய பாதிப்புகள் என்று பார்க்கும்போது: 

கடல் உணவுச் சங்கலியை பராமரிப்பதில் மீன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுச்சூழல் அமைப்பில் இருந்து ஒரே சமயத்தில் அதிகப்படியான மீன் இனங்களை நீக்குவதால், கடல் வாழ் உயிரினங்களின் இரையில் சீர்குலைவு ஏற்படுகிறது. இதனால் முழு உணவுச் சங்கிலியும் பாதிக்கப்பட்டு, மற்ற கடல் இனங்கள் அழிவதற்கு வழிவகுக்கும். 

  • அதிகப்படியான மீன்களைப் பிடிப்பதால் பெருங்கடலில் பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கிறது. சில குறிப்பிட்ட மீன்களின் எண்ணிக்கை குறையும் போது, ஒரு சில இனங்களின் பெருக்கத்தை அது தூண்டிவிடும். இந்த ஏற்றத்தாழ்வு கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும். 

  • Bycatch எனப்படும் மிதமிஞ்சிய மீன்பிடி நடைமுறைகளால், தேவையில்லாத உயிரினங்களும் அதிக அளவில் தற்செயலாக பிடிக்கப்படுகின்றன. இதில் கடல் பாலூட்டிகள், கடல் ஆமைகள், பறவைகள் மற்றும் பிற பாதிக்கக்கூடிய இனங்களும் அடங்கும். இதன் காரணமாகவும் கடல் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது. 

  • அதிகப்படியான மீன் பிடித்தல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் பெரிதளவில் பாதிக்கிறது. மீன்களின் எண்ணிக்கை குறைவதால் மீனவர்கள் அதிக தூரம் பயணிக்கவும், கடலில் அதிக நேரத்தை செலவிடவும், விலை உயர்ந்த உபகரணங்களில் முதலீடு செய்யவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது பெரும்பாலும் மீனவர்களின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இதையும் படியுங்கள்:
எலுமிச்சை சாறு Vs. இளநீர்: கோடைகாலத்திற்கு எது சிறந்தது? 
Impact of Overfishing

எனவே இத்தகைய பாதிப்புகளைத் தீர்க்கவும், நமது பெருங்கடலின் நீண்டகால ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், அவசர நடவடிக்கைகள் தேவை. நிலையான மீன்பிடி நடைமுறைகளைத் தழுவி, சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலம், கடலின் சமநிலையை நாம் பாதுகாக்க முடியும். இது நமது சுற்றுச்சூழலையும், நம்மையும் பெரிதளவில் காக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com