கழிவுகளால் அழியும் பூமி.. சீக்கிரம் எதாவது செஞ்சே ஆகணும்!

The earth is destroyed by waste.
The earth is destroyed by waste.

தேவைக்கு அதிகமான நுகர்வுக் காரணமாக அழிவை சந்திக்கும் பூமி.

மனிதன் மிகவும் சுயநலம் கொண்டவன் என்பதை மனித ஆக்கிரமிப்பு மூலம் இந்த பூமி கண்டு வரும் சிரமங்கள் மற்றும் பாதிப்புகள் மூலம் அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் குறிப்பாக தற்போதைய நவீன மனித சமூகம் பூமி தோன்றிய 19ஆம் நூற்றாண்டுக்கு முன் வரை கண்டிராத மாற்றங்களை அதன் பிறகான காலங்களில் மனித சமூகம் கண்டிருக்கிறது. அதே நேரம் 20 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு மனித சமூக வரலாறு பூமியின் அழிவில் முக்கிய காரணியாக மாறி இருக்கிறது.

அந்த காலங்களில் காடுகள், பல்வேறு வகையான உயிரினங்கள், இயற்கை சூழல்கள், கனிம வளங்கள் அழிப்பு நடவடிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய மனிதச் சமூகம் தேவைக்கு அதிகமான நுகர்வைக் கொண்டிருப்பதால் அழிவு விரைவாக்கப்பட்டு இருக்கிறது என்றும், அதிகரித்து இருக்கிறது என்றும் உலக சூழலில் அமைப்பு தெரிவிக்கிறது.

ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு இன்றியமையாத பிளாஸ்டிக் தேவை வெரும் 50 கிராம் மட்டுமே, ஆனால் இன்று ஒரு மனிதனால் தினசரி 1.5 கிலோ அளவிற்கான பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி ஆகிறது. அதிலும் உற்பத்தி நிறுவனங்கள், ஆலை களில் ஏற்படும் கழிவுகள் மிக அதிகமாக இருக்கிறது.

தேவைக்கு கூடுதலான நுகர்வு காரணமாக மக்கும் வகை கழிவுகள் உருவாவதும் அதிகரித்திருக்கிறது. அவற்றின் மூலம் பிரச்சனை இல்லை என்றாலும் இதே செயல்பாடு மக்காத வகை குப்பையிலும் எதிரொலிக்கிறது. இதனால் பூமியில் பெரும் பகுதி குப்பைகள் சூழ்ந்த இடங்களாக உருவெடுக்க தொடங்கி இருக்கின்றன. அதே நேரம் குப்பைகளை கையாள உலகில் எந்த நாடிடமும் சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
மூன்று ஆண்டுகளுக்கு பூமி வந்தடைந்தது விண்கல் மாதிரிகள்.. நாசா சாதனை!
The earth is destroyed by waste.

இதே நிலை தொடரும் பட்சத்தில் இன்னும் நூறாண்டுகளில் பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதிகள் குப்பை மேடுகளாக உருவாக கூடும். மேலும் கடல் பகுதியில் அதிகரித்து வரும் குப்பைகள் கடல் நீர்மட்டத்தினுடைய உயர்வுக்கு காரணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களை அழிக்கின்றன. கடலில் உள்ள வளங்கள் அழிக்கின்றன.

இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் பூமியின் மூன்றில் ஒரு சதவீத பகுதிகளை கடல் நீர் சூழும் அபாயம் ஏற்படும். ஒருபுறம் குப்பைகளும் மறுபுறம் கடல் நீரும் பூமியை சூழ்ந்து கொள்ளும் பட்சத்தில் மனிதர்கள் வாழும் இடம் கேள்விக்குறியாக்கப்படும். இனியும் சிந்திக்கவில்லை என்று சொன்னால் பல லட்சம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட்ட பூமி இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களின் சுயநலத்தால் பெரும் பாதிப்பை சந்திக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com