
வன்னி மரம் மிக வசீகரமான மரம். இதன் அனைத்து பாகங்களும் சிறப்பு வாய்ந்தவை. வன்னிமரம் என்றாலே விருத்தாசலம்தான் ஞாபகத்துக்கு வரும். இங்குள்ள விருதகிரி கோவிலை வன்னி மரத்தின் இலைகளை பறித்துதான் கட்டினார்களாம் எப்படி?.
விபசித்தி முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கு கோவிலை கட்டிவிட்டு ஜீவசமாதி அடைந்திருக்கிறார். கோவில் கட்டும் வேலையாட்களுக்கு மரத்தின் கீழ் உட்கார்ந்து இலைகளை உருவி அவர்களுக்குக் கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைக்கிறார்களோ அந்த அளவிற்கு பொன்னாக மாறுமாம். வேலை செய்யாத சோம்பேறிகளுக்கு. இலையாகவே இருக்குமாம். இது வரலாற்றுச் சான்றுகளிலும் இருக்கிறது.
குழந்தை இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்கள் இக்கோவில் சென்றால் பிரச்னை தீரும். இந்த வன்னிமரப்பட்டையை கஷாயம் செய்து குடிக்க குழந்தை பாக்கியம் உண்டாகும். ரத்தத்தையும் இது சுத்தப்படுத்தும். வன்னிமரக்காற்றுபட்டால் மிக நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.
வன்னிக்காயை பொடிசெய்து சாப்பிட மாத விலக்கு பிரச்னை, அதிக இரத்தப்போக்கு பிரச்னை எல்லாம் தீரும். இந்த வன்னிக்காய் பொடி சாப்பிட விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பொடி மார்பு சளியை நீக்கும். இந்த வன்னி இலையை அரைத்து புண் இருக்கும் இடத்தில் கட்டினால் புண் சரியாகும். இந்த மரத்தை கரையான் தொடாது. அத்தகைய வலிமை உள்ளது இந்த மரம்.
இதற்கு தெய்வீகத் தன்மை உண்டு. பல சிவாலயங்களில் தல விருட்சமாக இருப்பது வன்னிமரம்தான். இராமபிரான் இராவணனுடன் போர் புரியும் முன் வன்னி மரத்தைத் தொட்டு வணங்கிச் சென்றாராம். அதேபோல் வள்ளிக் குறத்தியை மணக்க முருகன் வன்னி மரத்தடியில் காட்சியளித்தாராம்.
அதேபோல் பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்வதற்குமுன் அவர்கள் ஆடை, ஆயுதம் மற்றும் அணிகலன்களை்களை ஒரு பெரிய துணியில் கட்டி வன்னி மரத்தடியில் வைத்ததாக நம்பப்படுகிறது. இது பாதுகாப்பிற்கும், சத்தியத்திற்கும் உட்பட்ட மரம்.
வீரியம் வெற்றி என எல்லாம் தரக்கூடிய பண்பு இதற்கு உண்டு. ஏராளமான மருத்துவ குணங்கள் உடையது. ஆன்மிகம் மருத்துவம் என இரண்டிற்கும் சிறந்த மரம் இதன் கன்றை பாதுகாத்து வளர்த்தால் எல்லா தோஷங்களும் நீங்கும்.
வீட்டில் வன்னிமரம் வளர்த்தால் ஒற்றுமை அமைதி, செழிப்பு உண்டாகும்.