
இரவின் ராணி என்று அழைக்கப்படும் எஃபிபில்லம் ஆக்ஸிபெட்டலம் காக்டஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மலர் இரவில் மலர்ந்து அதிக இனிமையான நறுமணத்தை வீசும் தன்மைகொண்டது. பெரும்பாலும் சொர்க் கத்திலிருந்து வரும் மலர், இரவின் ராணி, டச்சுக் காரின் பைப் கற்றாழை, காட்டுக் கற்றாழை, இரவு பெண்மணி என்று செல்லப் பெயர் பெற்ற இந்த கற்றாழை இனம், இந்த இனத்தில் அதிகம் பயிரிடப்படும் வகைகளில் ஒன்றாகும். இதன் மூலப்பகுதி மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா. மேலும் இந்த மலர் இலங்கையில் காணப்படுகிறது.
வளர்ச்சி பண்புகள்: இரவின் ராணி என்பது வெப்பமண்டல எபிஃபைட் முதல் லித்தோஃபைட் மற்றும் முதுகெலும்பு இல்லாத கற்றாழை ஆகும். இது வான்வழி வேர்கள் மற்றும் பெரிய மணம் கொண்ட பூக்களை கொண்டுள்ளது. இது மற்ற தாவரங்கள் மற்றும் பாறைகளில் 10 அடி உயரம் வரை வளர்கிறது. பொதுவாக ஒரு சிறிய அலங்கார வீட்டுத் தாவரமாக வளர்க்கப்படுகிறது. இது நீண்ட, தட்டையான, பச்சை நிறத்தில் இலை போன்ற கிளைகளை கொண்டுள்ளது. அவை மடல் விளிம்புகளை கொண்டிருக்கும்.
வளர்ப்பு மற்றும் பராமரிப்பு: வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழலை விரும்பும். நேரடி சூரிய ஒளியை தவிர்த்து மெல்லிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வளர்க்கலாம். அடிக்கடி நீர் ஊற்றி ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும். நீர் பாசனம் செய்யும்போது மண்ணை முழுவதுமாக ஊறவைத்து வசந்த காலம் மற்றும் கோடைகாலத்தில் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சவும். 50 முதல் 80 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலையை விரும்புகிறது.
அதிக ஈரப்பதத்தில் செழித்து வளரும். இதை தண்டு வெட்டல் மூலம் எளிதாக பரப்பலாம். பூக்கள் வௌவால்கள் மற்றும் அந்துப் பூச்சிகளால் மகரந்த சேர்க்கை செய்யப்படுகின்றன. பூத்த பிறகு உண்ணக்கூடிய ஊதா_சிவப்பு பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மலர்கள்: வெள்ளை நிறத்தில் 15_25 செ.மீ அகலம் கொண்ட பெரிய மணமான பூக்களை கொண்டுள்ளது. இது உலகிலேயே மிகவும் விலை யுயர்ந்த கடும் புல் மலர் ஆகும். மிகவும் அரிதானது மற்றும் மென்மையானது. இதை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முடியாது. இந்த பூவின் ஆயுட்காலம் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே. பொதுவாக விடியற்காலையில் வாடிவிடும்.
இது பறிக்கப்பட்ட உடனே வாடி விடுவதால் இதை காண்பதோ, வாங்குவதோ சாத்தியமற்றது. இருந்தாலும் இந்த மலரின் நறுமணம் அதன் அமைதியான குணங்களுக்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த மலரின் அற்புதமான நறுமணத்தை அனுபவிக்க ஒரே வழி கடும் புல் ஈர்க்கப்பட்ட வாசனை திரவியத்தை வாங்குவதுதான்.
மருத்துவ பண்புகள்: சீன மருத்துவத்தில் சில இடங்களில் இதன் பாகங்களை உடல் சூடு குறைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் கண்பார்வையினை மேம்படுத்த உதவுகிறது. மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைத்திருக்கும்
சிறப்பு அம்சம்: இந்த மலர் ஒரே ஒரு இரவில் மட்டுமே மலர்ந்து மறுநாள் மறைந்து விடும். இந்த சிறப்பு தன்மையால் இது “நிஷாகந்தி” (இரவில் மலரும் மலர்) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு பிரம்ம கமலம் என்ற பெயரும் உண்டு. இந்த பூவைப் பார்ப்பதற்கு பிரம்மன் படுக்கையில் இருப்பதைப்போல் இருப்பதால் இந்த பெயர் வரக்காரணம் என்று அறியப்படுகிறது.