அழகான பறவை வகைகளில் கிளிகளும் ஒன்று. உலகில் 350 க்கும் மேற்பட்ட கிளி இனங்கள் உள்ளன. இருபது வகையான கிளிகள் செல்லப் பிராணிகளாக வீட்டில் வளர்க்கப்படுகின்றன. இயல்பிலேயே கிளிகள் புத்திசாலித்தனமான பறவைகள். மக்களுடன் அன்போடு பழகக் கூடியவை. தங்களை வளர்க்கும் மக்களிடம் பாசமாகவும் அரவணைப்புடனும் இருக்கும். சில வகையான வித்தியாசமான கிளிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்தக் கிளிகள் அற்புதமாக பேசக்கூடியவை. இவை நூற்றுக்கணக்கான சொற்களைக் கற்றுக்கொண்டு சூழலுக்கேற்ப அவற்றைப் பயன்படுத்துகின்றன. இவை அபாரமான புத்திசாலித்தனமான பறவைகள். சிறு குழந்தையைப் போன்ற விளையாட்டுக் குணம் கொண்டவை. இவற்றால் வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் எண்களை அடையாளம் காணவும் புதிர்களை தீர்க்கவும் முடியும் என்பது வியப்பான விஷயம். இந்தக் கிளிகள் மனிதர்களுடன் ஆழமாக பிணைந்து வாழும் தன்மை கொண்டவை. இவற்றின் மென்மையான செதில் போன்ற சாம்பல் நிற இறகுகள், பிரகாசமான சிவப்பு வால்கள், மஞ்சள் நிறக் கண்கள் போன்றவை இவற்றுக்கு அழகுக்கு அழகு சேர்க்கின்றன.
பெரும்பாலான அமேசான் கிளிகள் மஞ்சள், நீலம் அல்லது சிவப்பு நிற பின்னணியில் பச்சை நிற உடல்களைக் கொண்டுள்ளன, இவற்றின் தலைகள் அல்லது இறக்கைகள் பச்சை நிறத்தில் இருக்கும், இவை துணிச்சலானவை மற்றும் நன்றாக பேசக் கூடியவை. சில கிளிகள் திறமையாக பாடவும் செய்யும். இந்தக் கிளிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் தன்மை கொண்டவை. விளையாட்டுத்தனமும், தன்னம்பிக்கை மிக்கவைகளாகவும் விளங்குகின்றன. பெரும்பாலான மக்களுக்கு மிகப் பிடித்தமான கிளிகள் ஆகும்.
இந்த வகையான கிளிகளில் ஆண் கிளிகள் பிரகாசமான பச்சை நிறத்திலும் பெண் கிளிகள் அடர் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் உள்ளன. இவை கிளி வகைகளில் அரிதான குறிப்பிடத்தக்க வேறுபாடு ஆகும். இவை மற்ற பெரிய கிளிகளை விட அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும். அன்பான மற்றும் நட்பான நடத்தைக்கு பெயர் பெற்றவை. மிகவும் பாசமாக பழகக் கூடியவை. இவற்றுக்கு முழுக் கவனம் செலுத்தி வளர்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டு நடைமுறைகளை கற்றுக்கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளும். நல்ல குரல் வளம் மிக்கவை. பயிற்சியளித்தால் பல்வேறு வார்த்தைகளை அழகாகப் பேசும். பிற கிளைகளைப் போல அதிகமாக சத்தம் இடுவது இல்லை.
இந்தக் கிளிகளுக்கு தனித்துவமான தலை அமைப்பு உள்ளது. உற்சாகமாக இருக்கும்போது இந்தக் கிளிகள் இதன் கழுத்தில் சிவப்பு மற்றும் நீல நிற இறகுகளின் விசிறி வடிவ வரிசையை உயர்த்திக்கொள்ளும். பார்ப்பதற்கு ஒரு தலைக்கவசம் அணிந்திருப்பதைபோல தோற்றமளிக்கும். இவற்றை வீட்டில் வைத்து வளர்ப்பதில்லை என்றாலும் இவற்றின் அழகான தோற்றம் மற்றும் ஆளுமைத்தன்மைக்காக மக்கள் இவற்றை விரும்புகிறார்கள்.
இவை மிகப்பெரிய கிளிகளில் ஒன்றாகும். நீண்ட வால்களும் பிரகாசமான வானவில் போன்ற இறகுகளும் கொண்டவை. கிளிகள் உலகில் மென்மையான ராட்சதர்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் பெரிய வளைந்த அலகுகள் கடினமான கொட்டைகள் மற்றும் விதைகளை எளிதில் உடைக்கும் தன்மையுடையவை. பெரும்பாலும் ஜோடிகளாகவோ அல்லது கூட்டமாகவோ காணப்படுகின்றன. தனிமையில் விடப்பட்டால் இவை காதுகளை துளைக்கும் அளவுக்கு சத்தமிடக்கூடியவை. புத்திசாலித்தனமான தந்திரமான பறவைகளாக கருதப்படுகின்றன. வார்த்தைகளை எளிதில் கற்றுக்கொள்ளும்.
மிகச்சிறிய கிளி வகைகளில் ஒன்றாகும். பலவிதமான பிரகாசமான வண்ணங்களில் உள்ளன. விளையாட்டுத் தனமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். பிற பறவைகள் மற்றும் மனிதர்களுடன் நன்றாக அரட்டை அடிக்கும். விசிலடிக்கும். மிமிக்ரி செய்வதிலும் சிறந்தவை. வார்த்தைகளை சொல்லச் சொல்ல கற்றுக்கொள்ளும். நட்புணர்வுடன் பழகக்கூடியவை. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.