ஒரு நாட்டில் 'முன்னோக்கி பாய்ச்சல்' என்ற திட்டம் அமுலாக்கப்பட்டது. '4 பூச்சி அழித்தல்' என்ற இயக்கம் ஆரம்பித்தது.
1. எலிகள்
2. ஈக்கள்
3. கொசு
4. சிட்டுக்குருவி
இதில் உள்ள நான்கு பூச்சிகளையும் அரசு அழிக்க துவங்கியது. வயலில் பயிர்களை சிட்டுக்குருவி சாப்பிடுவதாக நம்பப்பட்டது.
எனவே விவசாயிகளை காக்கும் பொருட்டு 4 பூச்சிகளையும் அரசு அழித்தது.
இதில் சிட்டுக்குருவியை துப்பாக்கி சூடு நடத்தி கொன்றனர்.
உண்மையில் சிட்டுக்குருவி பயிர்களை சாப்பிடவில்லை. பயிர்களை தாக்கும் புழு, பூச்சிகளையுமே சாப்பிட்டது.
இந்தத் திட்டம் நிறைவேறிய ஓராண்டில் ஆய்வகம் சிட்டுக்குருவி முழுவதும் பரிசோதித்தது. அதன் வயிற்றில் பயிர்கள் இல்லவே இல்லை. மாறாக புழு, பூச்சிகள் தான் இருந்தன.
அரசுக்கு பேரதிர்ச்சி.
சிட்டுக்குருவிகள் அனைத்தும் அழிக்கப்பட்டதால்… சிட்டுக்குருவி சாப்பிடும் வெட்டுகிளிகள் கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு எண்ணிக்கையில் அதிகரித்து வந்தது. அது பயிர்களை சாப்பிடும். எனவே விவசாயிகள் பெரும் கஷ்ட்டத்திற்கு ஆளாகினர். பயிர்களை நாசம் செய்தது வெட்டுகிளிகள்.
எந்த நோக்கத்திற்காக சிட்டுக்குருவி ஒழிப்பு நடந்ததோ… அதே நிலைமை பன்மடங்கு அதிகரித்தது. சிட்டுக்குருவி விவசாயிகளின் நண்பன் என்று மிகவும் காலம் கழிந்த பின்னே தான் புரிந்தது.
1962ல் 'முன்நோக்கி பாய்ச்சல்' திட்டம் கை விடப்பட்டது. சிட்டுக்குருவி ஒழிப்பு இயக்கம் நின்றது. ஒரு தனி மனிதனின் முடிவில் அரசு யோசனை இன்றி செய்த செயல் பயிர் சாகுபடியை அடியோடு அழித்தது. பல லட்சக்கணக்கான டண் பயிர்கள் அழிந்தது. சிட்டுக்குருவி பயிர்களை சாப்பிடுவது இல்லை என்று நாட்டின் ஆராய்ச்சி நிறுவனமே ஊர்ஜீதப் படுத்திவிட்டது.
சுமார் ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தான் சிட்டுக்குருவி பற்றிய உண்மை வெளிவந்தது.
வயல்களில் சிட்டுக்குருவி அதிகம் இருப்பதால் அது தான் பயிர்களை நாசம் செய்கிறது என்று நினைத்தது அபத்தத்திலும் அபத்தம்.
ஆம்!!
சிட்டுக்குருவி விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் புரிந்து கொண்டார்கள்.
என்னப் பயன்…?
அதற்குள் பயிர் சாகுபடி அடியோடு அழிந்தது. நாடு முழுவதும் பஞ்சம். உணவின்றி இறந்த விவசாயிகள் ஏராளம்.
இயற்கையின் அமைப்பே சுற்றுச்சூழல் அனுசரித்து தான் உள்ளது. சுற்றுச்சூழலை நிச்சயமாக பாதிக்கும் என்று நிச்சயமாக தெரிந்தால் மட்டுமே நாம் இயற்கையுடன் போராட முடியும். அவசரப் பட்டு தவறான முடிவு எடுத்தால் சர்வநாசம் மட்டுமே மிஞ்சும். இது உலகத்திற்கே ஒரு பாடம். விவசாய நண்பனை விவசாய எதிரியாக பார்த்ததின் விளைவு தான் பசி, பட்டினி, பஞ்சம் வரக்காரணம். ஆயிர கணக்கில் மக்கள் மடிந்தார்கள்.
லட்ச கணக்கான சிட்டுக்குருவிகள் அனைத்தும் இறந்ததால் அங்கு சுற்றுச்சூழல் அடியோடு பாதித்தது. ஒரு முடிவு எடுக்கும் முன் எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, நன்கு ஆராய்ந்து, பின்னர் உறுதியான முடிவு எடுக்க வேண்டும். இல்லை என்றால் எல்லாம் நாசம் தான்.
இந்த சிட்டுக்குருவி விஷயம் உலகிற்கே மிகவும் தாமதமாகவே தெரிய வந்தது. இது போல் தவறு எந்த நாட்டிலும் நடக்க கூடாது. நன்கு யோசித்து நன்கு ஆராய்ந்து பின்னர் மட்டுமே முடிவு எடுக்க வேண்டும்.
இது எந்த நாட்டில் நடந்தது..?
சீன மக்கள் குடியரசு
அதிபர் - மா சே துங்..!