பூமியின் விசித்திரமான இடம். இங்கு கடிகாரம், வாட்ச் வைத்திருப்பது வேஸ்ட்!

No Time Zone.
No Time Zone.
Published on

பூமியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாம் மற்ற இடங்களில் பயன்படுத்துவது போல, Time Zone-ஐ பயன்படுத்த முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? 

நாம் என்றாவது ஒரு நாள் இன்று என்ன நாள், கிழமை, நேரம் எனத் தெரியவில்லையே என்ற குழப்பத்தில் இருந்திருப்போம். இந்த குழப்பம் உங்களுக்கு எப்போதுமே இருந்தால் எப்படி இருக்கும்? உலகில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சூரியன் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மறையும், ஒரு முறை மட்டுமே உதிக்கும். அதனால் அந்த இடத்தில் நீங்கள் கடிகாரமோ, வாட்சோ வைத்திருந்தாலும் சரியான நேரத்தை வரையறுக்க முடியாது. 

அந்த விசித்திரமான அதிசய இடம் எதுவென்றால் நமது பூமியில் உள்ள வடதுருவம்தான். பூமியில் உள்ள எல்லா இடங்களிலும் Time Zone எனப்படும் நேரத்தை பின்பற்றும் முறை பயன்படுத்தப்படுகிறது. இது சூரியனின் நிலையைப் பொறுத்து இடத்திற்கு இடம் மாறுபடும். இதனாலேயே இந்தியாவில் பின்பற்றப்படும் நேரமுறை மற்ற நாடுகளுக்கு ஒத்து வராது. இது நாம் அனைவருக்குமே தெரியும். 

பூமியின் வரைபடத்தை எடுத்துப் பார்த்தால் அதில் வட துருவத்தில் இருந்து தென் துருவத்திற்கு கோடுகள் வரையப்பட்டிருக்கும். அதுதான் டைம் சோன். இப்படி பூமி மொத்தம் 24 டைம் சோன்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 24 கோடுகளும் வட துருவத்தில்தான் சந்திக்கின்றன.  பூமி ஒரு அச்சை ஆதாரமாகக் கொண்டு சுழன்று வருவதால் இரவு, பகல் என்ற கால மாற்றம் ஏற்படுகிறது. ஆனால் வட துருவத்தில் இந்த செயல்பாடு ஒத்து வராது. ஆறு மாதங்கள் முழுவதும் வெயிலாகவும், அடுத்த ஆறு மாதங்கள் முழுவதும் இரவாகவும் அங்கே இருக்கும். 

இதையும் படியுங்கள்:
ஸ்ட்ராபெரி விவசாயம் செய்யும் எம்.எஸ்.தோனி!
No Time Zone.

அப்படியானால் இங்கு வசிக்கும் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? என உங்களுக்கு சந்தேகம் எழலாம். நீங்கள் நினைப்பது போல இங்கு மனிதர்களால் வாழ முடியாது. பணியால் உறைந்து போய் இருக்கும். அதுவும் அந்த பனிக்கட்டிகள் நகர்ந்து கொண்டிருக்கும் என்பதால், குறிப்பிட்ட இடத்தில் மக்களால் நிலையாக வாழ முடியாது. இந்த இடம் எப்போதும் ஒரே மாதிரி இருக்கும் என சொல்ல முடியாது. எப்போதாவது ஆய்வுப் பணிக்காக மட்டுமே அங்கு மக்கள் சென்று வருவார்கள். 

பூமியில் நேரத்தை நாம் முறையாக பின்பற்ற முடியாத ஒரு இடமும் உள்ளது என்பதை கேள்விப்படும்போது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே இயற்கை மனித சக்திக்கு அப்பாற்பட்டதுதான். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com