
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான கழிவு மேலாண்மைக்கான தீர்வை தேடிக்கொண்டிருக்கும் வேளையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் உலகின் முதல் காளான் (Mushroom) திறனில் இயங்கும் டாய்லெட்டை உருவாக்கியுள்ளது. இந்தக் கழிவறை இயங்குவதற்கு தண்ணீரோ, மின்சாரமோ அல்லது வேறு ரசாயனங்களோ எதுவும் தேவையில்லை.
முதல் காளான் (Mushroom) திறனில் இயங்கும் மைகோ(Myco) டாய்லெட் செயல்படும் விதம்:
'மைகோ' டாய்லெட்டின் முக்கியமான அமைப்பே 'மைசீலியம்' என்ற காளானின் வேர் அமைப்பு தான். காளான் பூமிக்கடியில் வேர்கள் போல படர்ந்திருக்கும் வெள்ளை நிற இழைகளே மைசீலியம் எனப்படும். இதுவே, பூஞ்சைகளின் இயற்கையான சிதைவுக்கும், உறிஞ்சும் திறனுக்கும் காரணமாகும். இது கழிவுகளை தானாகவே உரமாக மாற்றுகிறது.
இதற்கு தண்ணீர், மின்சாரம், ரசாயனம் போன்ற எதுவும் தேவையில்லை. இதில் காளான்களின் வேர் அமைப்பான மைசீலியம் பயன்படுத்தப்படுகிறது.
பூஞ்சைகளின் இயற்கையான சிதைவு திறன்களைப் பயன்படுத்துவதால் கழிவு மேலாண்மை பிரச்சனைக்கு தீர்வாகவும் அமைகிறது. இந்த மைசீலியம் மனிதக் கழிவுகளுடன் தொடர்பு கொள்ளும் போது, பூஞ்சைகளின் இயற்கையான சிதைவு திறன்களைப் பயன்படுத்தி கழிவுகளை சிதைக்கிறது. இதன் முடிவில் கழிவுகள் உரமாக மாற்றப்படுகின்றன. இதனால் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான செலவு பெருமளவு குறைகிறது.
இது பூஞ்சைகளின் இயற்கையான சிதைவுத் திறன்களை கொண்டு இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. பூங்காக்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் இதைப் பயன்படுத்துவதால் சுகாதாரமான டாய்லெட் வசதியை வழங்க முடியும்.
குழாய் இணைப்புகள் இல்லாத இடங்களிலும் இதனை பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும். தண்ணீர் மற்றும் மின்சார வசதி அதிகம் இல்லாத பின்தங்கிய கிராமங்களில் இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது!