உலகில் ஆபத்தான 10 பூச்சிகள் இவை தான்! வாங்க தெரிஞ்சுக்கலாம்..

உலகில் ஆபத்தான 10 பூச்சிகள் இவை தான்! வாங்க தெரிஞ்சுக்கலாம்..
Published on

உலகில் பல லட்சகணக்கான பூச்சி வகைகள் உள்ளது. ஆனால், அவற்றில் மனிதனுக்கு மிகவும் ஆபத்தான பத்து பூச்சிகளை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.

கருப்பு விதவை சிலந்தி:

கருப்பு விதவை சிலந்தி
கருப்பு விதவை சிலந்தி

கருப்பு விதவை சிலந்தி என்றுஅழைக்கப்படும் Black Widow Spider இனச்சேர்க்கைக்கு பின், பெண் சிலந்தி ஆண் சிலந்தியை தின்றுவிடும். அதனால்தான் விதவை சிலந்தி என்று இதை அழைக்கிறார்கள். கண்ணாடி விரியன் பாம்பை விட 15 மடங்கு அதிக விஷத்தன்மை கொண்ட பூச்சியினமான இந்த சிலந்திகள், அதிகபடியாக 3 வருடங்கள் வரைக்கும் உயிர்வாழும்.

ஆப்பிரிக்கன் தேனீ:

ஆப்பிரிக்கன் தேனீ
ஆப்பிரிக்கன் தேனீEditor 1

இது killer bee என்றும் அறியப்படுது. இந்த தேனீக்கள், தென் அமெரிக்கா மற்றும் தென்மேற்கு அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுது. ஆபத்து நெருக்குவதாகவோ, புதிய ஒரு உயிரி நடமாடுவது உணர்ந்தாலோ, ஆப்பிரிக்கன் தேனீக்கள் தாக்குதல்ல ஈடுபடும். ஒருவேள நீங்க இருக்குற இடத்துல, இந்த வகை தேனீக்கள பாத்த அந்த இடத்துல இருந்து விலகி போறது ரொம்ப நல்லது.

கொசுக்கள்:

கொசுக்கள்
கொசுக்கள்

உலகத்துல, ஒரு உயிரினத்தால அதிகபடியான மனிதர்கள் பாதிக்கப்படுறாங்கனா, அது கொசுவாலத்தான். கொசுக்கள்ல 3,600 வகை இருக்கு. தண்ணீரு முட்டையிட்டு வளர்ந்து எந்த மனித வேறுபாடும் இல்லாம, தாக்கும் கொசுக்களால ஆண்டுக்கு பல கோடி உயிரிழப்புகள் ஏற்படுறதா ஆய்வுகள் மூலம் தெரிஞ்சுக்க முடியுது.  பல வைரலஸ்கள் பரவுறதுக்கு முக்கிய பங்கு வகிப்பது இந்த கொசுக்கள்தான்.

Wasps எனப்படும் குளவிகள்:

குளவிகளோட உடல், தேனீக்களோட உடலமைப்போட ஒத்திருக்கும். தேனீகள், ஒருமுறை கொட்டிவிட்டால் அதன் கொடுக்கையை இழந்துவிடும். ஆனால், குளவிகளோட கொடுக்கு ரொம்ப strongஆ இருக்கும். இதனால் அவை மீண்டும் மீண்டும் கொட்டுகின்றன. பெண் குளவிகள், தன் சகோதர முறை கொண்ட குளவிகளோட இனச்சேர்க்கையடைவதில்லை.

தேள்கள்:

2500க்கும் மேற்பட்ட தேள் வகை இருக்கு. அதுல 25 வகைக்கு மேலான தேள்கள் உயிரை கொல்லும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டவை. குறிப்பிட்ட வகை தேளோட விஷத்த பல நாடுகள் ஏற்றுமதியும் செய்யப்படுது. அந்த விஷம், பல கொடிய நோய்களுக்கு மருந்தாவும் மாற்றப்படுது. அதே சமயம் தேள் விஷத்தால உயிரிழப்புகளும் உலகம் முழுக்க பதிவு செய்யப்பட்டு வருது.

சிவப்பு நெருப்பு எறும்புகள்:

Editor 1

சிவப்பு எறுப்புகள்னு அறிப்படும் இந்த வகை எறும்புகள் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு. தேனீகள் மாதிரி, ராணி எறும்பு, அதன் பணியாளர் எறும்பு, ஆண் எறும்புகள் என்ற ஒரு காலணி வாழ்க்கையிலேயே எறும்புகள் வாழ்க்கை நகர்கிறது. இவை கடித்தால் மிக வலியை ஏற்படுத்துவதுடன், வீக்கத்தை உருவாக்கும்.

Ticks எனப்படும் உண்ணிகள்:

Ticks என அழைக்கப்படும் உண்ணி
Ticks என அழைக்கப்படும் உண்ணிKPixMining / Alamy Stock Photo

மனித உடலில் பாக்டீரியாக்களை கொண்டுவருவதில் உண்ணிகள், முக்கிய பங்கு வகிக்குது. 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரோ இந்த வகை உயிரினங்கள் இருக்கின்றன. உடலில் உண்ணிகளின் ஒட்டிக்கொண்டதாக உணர்ந்தால் உடனே அவற்றை அகற்றிவிட்டால், ஆபத்து குறைந்துவிடும். இல்லை என்றால், அவை நோய்களுக்கு வழிவகுக்கும்.

டரான்டுலா சிலந்தி:

டரான்டுலா சிலந்தி
டரான்டுலா சிலந்தி

இந்த வகை சிலந்திகள் 30 ஆண்டுகள் வரைக்கும் உயிர்வாழும். இது கிட்டத்தட்ட ஒரு குட்டி பீசா அளவுல இருக்கும்னு கணக்கிடப்பட்டிருக்கு. டரான்டுலா சிலந்திகள் கடித்தால் சொறிச்சல் மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுது, உண்மைய சொல்போன, இந்த வகை சிலந்திகள் மனிசங்கள பாத்து பயப்படக்கூடியதா இருக்கு.

 Centipedes மற்றும் Millipedes எனப்படும் பூரான்கள் மற்றும் மரவட்டைகள்:

Centipedes
Centipedes

பூரான் மற்றும் மரவட்டையின் விஷம் உயிரை கொல்லாது ஆனால், அது ஒவ்வாமைய உருவாக்கும். அவை நீண்ட நாட்களில் புண்ணாகவும் மாறிட வாய்ப்பிருக்கு.

Millipedes
MillipedesEditor 1

இரண்டிற்கும் அதிகபடியான கால்கள் காணப்படுது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உருவ அமைப்பை Centipedes மற்றும் Millipedes கொண்டிருக்கிறது.

ஈ:

Editor 1

ஈக்கள் உலகம் முழுக்க காணப்படும் சிறிய உயிரினம். கழிவுகளிலும், உணவிலும் ஒரே மாதிரி அமர்வதால், அவற்றின் மூலம் நோய்கள் அதிக அளவில் பரப்பப்படுது. எனவே அவை ஆபத்தை விளைவிக்ககூடிய பூச்சியினமாக கருத்தப்படுது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com