அவ்வளவு கொடூரமானவனா நீ? புலியின் நாக்கில் ஒளிந்திருக்கும் ரகசியம்!

Tiger's tongue
Tiger's tongue
Published on

காட்டு விலங்குகளிலே சிங்கத்திற்கு அடுத்தபடியாக வலிமை மிக்க விலங்காக பார்க்கப்படுவது புலி. என்னதான் சிங்கம் காட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் சிங்கத்தை விட புலிகள்  தனித்துவமான பண்புகளைக் கொண்டிருப்பதால் தான் புலி தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது.

புலி  மிகவும் பயங்கரமான விலங்குதான். ஆனால் புலியை காட்டிலும் புலியின்  நாக்கு மிகவும் வலிமை உடையதாக பார்க்கப்படுகிறது. புலியின் நாக்கில் ஆயிரக்கணக்கான முட்கள் போன்ற அமைப்புகள் உள்ளன. புலிகள் ஒரு இரையை வேட்டையாடும் போது அதன் தோலை உரிக்க கடிக்க வேண்டிய அவசியமே இல்லை. நாக்கினால் நக்கினாலே, தான் பிடித்த இரையின் தோலை உரித்து விடும் அளவுக்கு நாக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கும்.

Tiger's tongue
Tiger's tongue

புலியின் நாக்கு கிட்டத்தட்ட ஒரு சீப்பின் அமைப்பைப் போன்று இருக்கும் என்பது ஆச்சரியமாக இல்லை? உடம்பில் இருக்கக்கூடிய ரோமங்களில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குவதற்கு புலி தன் நாக்கை பயன்படுத்தும்.

புலியின் நாக்கை போன்று புலியின் உமிழ் நீரும் கூட மிக அற்புதமானது. புலியின் உமிழ்நீர் இயற்கையாகவே அதிக மருத்துவ குணம் கொண்டது. தன் உடலில் ஏற்படும் காயங்களை தன் நாக்கினால் நக்கியே புலி குணப்படுத்திக் கொள்ளும்.

இதையும் படியுங்கள்:
பல இதயங்கள் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா?
Tiger's tongue

உலகில் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்குகளில் புலி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்றால் புலிகள் இல்லையெனில் காடுகளின் வளர்ப்பு குறைந்து விடும். எப்படி என்று பார்க்கிறீர்களா?

புலிகள் தான் காடுகளில் தாவர உண்ணிகளான மான்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருவேளை மான்களின் எண்ணிக்கை அதிகமாக பெருகினால் காடுகளில் வளரக்கூடிய செடிகளை மான்கள் முழுவதுமாக தின்றே அழித்து விடும். அவ்வாறு செடிகள் அனைத்தும் உணவாக்கப்பட்டால் அவை மரங்களாக வளர்வதற்கு வாய்ப்புகள் இல்லை. இதனால் காடுகளின் உருவாக்கம் குறைவதற்கு நிறையவே வாய்ப்புண்டு. எனவே தான் காடுகளின் சமநிலையை பாதுகாப்பதில் புலிகள்  மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com