விவசாயிகளுக்கு பயனளிக்கும் டிஎன்ஏயு அக்ரி கார்ட் இணையதளம்!

விவசாயிகளுக்கு பயனளிக்கும் டிஎன்ஏயு அக்ரி கார்ட் இணையதளம்!
Published on

மிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள, ‘டிஎன்ஏயு அக்ரி கார்ட்’ இணையதளம் விவசாய இடுபொருட்களை வீடு தேடி சென்று விவசாயிகளுக்கு வினியோகம் செய்யும் முறைக்கு தமிழ்நாடு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வேளாண் உற்பத்தியில் உலகின் மிக முக்கிய நிலப்பரப்பாக தமிழ்நாடு விளங்குகிறது. பல்வேறு வகையான உணவுப் பொருட்கள், அரிசி வகைகள் போன்றவை தமிழ்நாட்டில் மட்டுமே விளையக்கூடிய பாரம்பரிய பயிர் வகைகளாக உள்ளன. மேலும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விளைநிலங்களின் பரப்பும், விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகம். அதனாலேயே தமிழ்நாடு அரசு விவசாயத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தற்போது வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட்டை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இப்படி விவசாயத்துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கான வேளாண் இடுபொருட்களை ஆன்லைன் வழியாக பதிவு செய்தவுடன் வீடு தேடிச் சென்று விநியோகம் செய்யும் நடைமுறை தொடங்கப்பட்டிருக்கிறது. தற்போது இதை அதிகம் விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.

விவசாயிகள் உரம், விதை மற்றும் வேளாண் இடுபொருட்களில் தரம் வாய்ந்ததை வாங்குவதற்கு அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் பல நேரங்களில் சரியான நேரத்துக்கு பயிரிட முடியாத நிலை ஏற்படுகிறது. இதைத் தீர்க்கும் விதமாக, தற்போது தமிழ்நாடு வேளாண் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாக வேளாண் உற்பத்தி விதைகள் மற்றும் இடுப்பொருள்களை டிஎன்ஏயு அக்ரி கார்ட் இணையதளம் மூலமாக வீடு தேடிச் சென்று விநியோகம் செய்து வருகிறது.

இதில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்பட்டவை மற்றும் தரம் வாய்ந்தவையாக மட்டுமே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பிற தனியார் இணையதளம் மூலம் விவசாயிகள் அனைத்து வகையான வேளாண் இடுபொருட்களையும் வாங்கி வந்தனர். இந்த நிலையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய இணையதளமான இடுபொருட்களை விற்பனை செய்யும் டிஎன்ஏயு அக்ரி கார்ட் இணையதளமும் விவசாயத்துக்குத் தேவையான அனைத்து மூலப் பொருட்களையும் விற்பனை செய்வதால் உரிய நேரத்தில் விவசாயிகளுக்குப் பொருட்கள் சென்றடைவதோடு, தரமானதாகவும் இருக்கும் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com