இந்தியாவில் அதிக மாசுபட்ட முதல் 10 நகரங்கள் இவைதான்! 

Top ten most polluted cities in India?
Top ten most polluted cities in India?

பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் போன இந்தியா, கடுமையான மாசுபாடு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. விரைவான நகரமயமாக்கள், தொழில்துறை வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு ஆகியவற்றால், நாடு முழுவதும் பல நகரங்களில் மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருகிறது. இப்பதிவில் இந்தியாவில் மிகவும் மாசுபட்ட முதல் 10 நகரங்கள் என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம். 

10. ஜலந்தர்: பத்தாவது இடத்தில் பஞ்சாபில் உள்ள தொழில் நகரமான ஜலந்தர் உள்ளது. இந்நகரம் தொழிற்சாலை உமிழ்வுகள் மற்றும் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாட்டுடன் அதிகமாக போராடுகிறது. இதனால் அந்த நகரத்தின் காற்றின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் மோசமடைகின்றது. 

9. குர்கான்: குர்கான் நகரின் விரைவான நகரமயமாக்கல், தொழில்துறை உமிழ்வு மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் காரணமாக, அதிக மாசுபாடுகளை எதிர்கொள்கிறது. இதனால் அந்த நகரத்தில் மோசமான காற்றின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன.

8. பாட்னா: பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா, வாகன மாசு, தொழிற்சாலை மாசு மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கங்கை நதியில் கொட்டுவதால் அதிக மாசு அளவுகளை அனுபவிக்கிறது. 

7. ஃபரிதாபாத்: ஹரியானாவின் தொழில் நகரமான பரிதாபாத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள், வாகனப் போக்குவரத்து உமிழ்வுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பயிர்க் கழிவுகளை எரிப்பதால் கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்கொள்கிறது. 

6. மும்பை: இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பை, கடுமையான போக்குவரத்து நெரிசல், தொழிற்சாலை மாசுக்கள் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அரபிக் கடலில் வெளியேற்றுவதால் அதிகப்படியான மாசுபாட்டை எதிர்கொள்கின்றது. இது அந்த நகரத்தில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. 

5. கொல்கத்தா: ஒரு பெரிய நகரமான கொல்கத்தாவில் தொழிற்சாலை மாசு, வாகனம் மாசு மற்றும் திடக்கழிவுகளை எரிப்பதால் அதிக அளவில் காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது. 

4. காசியாபாத்: உத்திரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் நகரம் தொழில்துறை நடவடிக்கைகள், வாகன உமிழ்வுகள் மற்றும் கட்டுமான தூசி ஆகியவற்றால் மாசுபாட்டின் பிரச்சனையை எதிர்கொள்கிறது. இந்த நகரம் டெல்லிக்கு அருகே இருப்பதால், டெல்லியின் மாசுபாடு பாதிப்புகளை இதுவும் சந்திக்கிறது. 

இதையும் படியுங்கள்:
புங்கை மரத்தின் மருத்துவ குணங்கள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
Top ten most polluted cities in India?

3. வாரணாசி:  கங்கை நதிக் கரையில் உள்ள புனித நகரமான வாரணாசி, தொழிற்சாலை கழிவுகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மற்றும் தகனம் செய்யப்பட்ட மிச்சங்கள் ஆற்றில் வெளியேற்றப்படுவதால் அதிக மாசுபாட்டை எதிர்கொள்கிறது. இந்த மாசுபாடு சுற்றுச்சூழலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நகரத்தின் மதம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் அச்சுறுத்துகிறது. 

2. கான்பூர்:  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தொழில்துறை நகரமான கான்பூர், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த நகரின் காற்று மற்றும் நீரின் தரம் மோசமாகியுள்ளது.  

1. டெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வாகன உமிழவுகள், தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் போன்றவற்றால் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் அங்கே வசிப்பவர்களுக்கு கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com