உலக புகையிலை ஒழிப்பு தினம்:  சிறப்பு மணல் சிற்பம்! 

உலக புகையிலை ஒழிப்பு தினம்:  சிறப்பு மணல் சிற்பம்! 

பத்மபூஷன் விருது பெற்ற பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்,  உலக புகையிலை தினத்தை முன்னிட்டு இன்று பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி சர்வதேச புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப் படுகிற்து. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது

புகைபிடிப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகையிலை பழக்கம் காரணமாக இறக்கிறார்கள் என்று மருத்துவ ஆய்வறிக்கை . தெரிவிக்கிறது. சிகரெட் பாக்கெட்டில் 'புகைபிடிப்பது உடல் நலனுக்குக் கேடு' என்ற வாசகம் இடம்பெற்றாலும், அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. 

இந்நிலையில் இன்று புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒரிசாவின் பூரி கடற்கரையில்  உருவாக்கிய சிறப்பு மணல் சிற்பம் கான்போரை கவர்கிற்து. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com