சுனாமியில் ஸ்விம்மிங் போடும் பெட்ரல் பறவைகள்!

பெட்ரல் பறவை
பெட்ரல் பறவை
Published on

தைரியமாக எதற்கும் துணிந்தவர்களை, ‘இவரு சுனாமியிலேயே ஸ்விம்மிங் போடுவாருங்க’ என்று சொல்வோம். ஆனால், அவர் சுனாமியில் போய் நீச்சல் அடிக்க மாட்டார். ஆனால், 'பெட்ரல்' என்ற பறவை இனம் இந்த அதிபயங்கரமான சாகசத்தில் ஈடுபடுகிறது. ப்ரோசெல்லரிடே குடும்பத்தைச் சேர்ந்த கடல் பறவை இனம்தான் இந்த பெட்ரல்.

பார்ப்பதற்கு அப்பாவியான புறா போல் இருக்கிறது இந்த பெட்ரல் பறவை இனம். பொதுவாக, கடல் பறவைகள் சூறாவளி வந்த உடனேயே ஓரமாக ஒதுங்கிவிடும். இல்லையென்றால் அமைதியான பகுதியில் அடைக்கலம் தேடிச் சென்று அடங்கி விடும். ஆனால், பெட்ரல் பறவைகள் வேறு ரகம். புஜியோ தீவில் கூடு கட்டி வாழ்கின்றன இந்தப் பறவைகள். புயலின் உதவியால் அட்லாண்டிக் கடல் மீது 1130 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்கிறது. இந்தத் தகவல் ஜிபிஎஸ் கருவியின் உதவியால்  பெட்ரல் பறவைகளைக் கண்காணித்தபோது கிடைத்தது. இதை ஆய்வு செய்த WHOI எனும் கடல்சார் கல்வி நிறுவனம் இந்த அதிசயம் குறித்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கடலில் 26 அடி உயர அலைகளும் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் அடிக்கும் ஆபத்தான சூழலிலும் இந்தப் பறவைகள் இந்த ரிஸ்க்கான பயணத்தில் ஈடுபடும். இவ்வளவு ரிஸ்க் எடுத்து பறப்பது எதற்கு என்று நினைக்கிறீர்கள்? எல்லாம் உணவுக்காகத்தான்.

இதையும் படியுங்கள்:
இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளைப் போக்கும் பூண்டு பால்!
பெட்ரல் பறவை

புயல் இல்லாத நேரங்களில் இந்தப் பறவைகளின் இஷ்ட உணவான மீன்களை பிடித்துச் சாப்பிட இவை நீரின் ஆழத்திற்குச் சென்று கஷ்டப்பட வேண்டும். ஆனால், புயல் உருவான சமயங்களில் ஆழத்தில் இருக்கும் மீன்களை இந்தப் பறவைகளின் வாய்க்கு எட்டும் தூரத்தில் கொண்டு வந்து விடுகின்றன புயல்கள். இதனால் இவை புயலில் பறந்தபடி மீன் விருந்து உண்கின்றன.

‘புயல் உருவாகி இருக்கிறது, மீனவர்களும் பொது மக்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம்’ என வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுவதெல்லாம் இந்தப் பெட்ரல் பறவைகளின் காதுகளுக்கும் எட்டித்தான் இப்படி மீன் விருந்துண்ணச் செல்கின்றன என்றே நினைக்கத் தோன்றுகிறது.

அழிவை ஏற்படுத்தும் புயல் கூட இப்படி ஒரு ஆக்கபூர்வமான விஷயத்திற்கு பயன்படுகிறது என்பது ஆச்சரியமாகதானே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com