கடலுக்கடியில் பாறைகளில் வளரும் ஆல்கேகளின் வகைகளும் முக்கிய கூறுகளும்!

Sea Lettuce
Sea Lettuce
Published on

டலின் அடியில் பாறைகளில் ஒட்டிக் கொள்கின்ற சிலவகை ஆல்கே வகைகள் Ulva (sea lettuce) இது ஒரு வகை பச்சை ஆல்கே. இது பொதுவாக Sea Lettuce என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

1. அமைப்பு: Ulva வேர்கள், தண்டு, இலை என பிரிந்து இல்லாமல் ஒரு தட்டை மேற்பரப்பாக இருக்கும். இது பொதுவாக இரு அடுக்கு செல்கள் கொண்ட மெல்லிய அமைப்பை உடையது. தோற்றம் கொத்துமல்லி இலையைக் போன்றே இருக்கும்.

2.வளரும் இடங்கள்: கடற்கரைப் பகுதிகள், உப்புநீர் ஏரிகள், பாறைகள் மீது. அதிகமான சூரியஒளி மற்றும் உப்புநீர் தேவை.

3.வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம்: செல் பிரிவு (binary fission), ஸ்போர் (spores) மற்றும் லார்வா (gametes) மூலம் இனப்பெருக்கம் நடக்கும். இது வாழ்க்கைச்சுழற்சியில் isomorphic alternation of generations எனப்படும் அமைப்பைக்கொண்டது

4.பயன்கள்: உணவாக ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சில மருந்துகளில் இதன் சத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடல் உயிரினங்களுக்கு உணவாகவும், ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை வெளியிடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

5.சூழலியல் சிக்கல்கள்: அதிகமான ஊட்டச்சத்துக்கள் (nutrients) கடலில் சேரும்போது Ulva மிகவும் அதிகமாக வளர்ந்து “green tide” எனப்படும் பசுமை பரவலை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கு கேடு செய்யக்கூடும்.

Sargassum என்பது ஒருவகை பழுப்பு ஆல்கே ஆகும். இது கடல் சூழலில் மிகவும் முக்கியமான பாசிக்களங்களில் ஒன்று.

1.அமைப்பு: Sargassum உடல் தண்டுகள், இலை போன்ற பாகங்கள் மற்றும் மிதவைப்பை (air bladders) கொண்டது. Holdfast அமைப்பின் மூலம் பாறைகளில் உறுதியாக ஒட்டிக்கொள்ளும். மிதவைப்பைகள் இதை நீரில் மிதக்க உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
உலக பிரசித்தி பெற்ற நீரூற்றுகளும் அவற்றின் வகைகளும் சிறப்புகளும்!
Sea Lettuce

2.வளரும் இடங்கள்: சமுத்திர பாறைகள், பவளத்திறைகள் (coral reefs), மற்றும் Sargasso Sea எனப்படும் மத்திய அட்லாண்டிக் கடல் பகுதியில் மிகுந்த அளவில் காணப்படும்.

3.இனப்பெருக்கம்: உணவுசார் (vegetative) மற்றும் ஸ்போர்கள் (spores) மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. சில வகைகள் (sexual reproduction) வாயிலாகவும் இனங்கள் அதிகரிக்கின்றன.

4.பயன்கள்: மீன்கள் மற்றும் கடல் உயிர்களுக்கு வாழ்விடமாக செயல்பட்டு பல உயிர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடமாக உள்ளது. ஆசியா போன்ற இடங்களில் இதனை உலர்த்தி உணவாக பயன்படுத்தப் படுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக வேளாண்மை உரமாக (biofertilizer) பயன்படுத்தப்படுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

5.சூழலியல் பாதிப்பு: மிக அதிகமாக பரவி, கடற்கரைகளை மறைத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

Gracilaria இவை பாறைகளில் உறுதியாக ஒட்டிக்கொண்டு உமிழும் ஒளிச்சேர்க்கை செயலின் மூலம் வளரும் ஒருவகை சிவப்பு ஆல்கே. உலகளவில் பயன்படும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பாசி ஆகும்.

1.அமைப்பு : தண்டு போன்ற தன்மையுடன், ரேகை போன்ற கிளைகள் கொண்டது. இது மென்மையான, இலகுவான பாசியாக பாறைகளில் ஒட்டி வாழக்கூடியது.

இதையும் படியுங்கள்:
ரோஜா மலர்களின் வகைகள், மற்றும் மருத்துவ குணங்கள்!
Sea Lettuce

2.வளரும் இடங்கள்: அதிக உப்புத்தன்மையுடன் கூடிய கடல்நீரில் குறைந்த ஆழம்கொண்ட பாறை நிலங்களில், காணப்படுகிறது.

3.இனப்பெருக்கம்: முக்கால வாழ்க்கைச்சுழற்சி உள்ளது: காமெடோபைட் (gametophyte) கார்போஸ்போரைட் (carposporophyte) டெட்ராஸ்போரைட் (tetrasporophyte) இவை ஒளிச்சேர்க்கை மூலம் ஊட்டச்சத்துகளை உருவாக்குகின்றன.

4.பயன்கள்: இதன் பொடி பாகங்கள் ஜெல்லி, உணவுப் பொருட்கள், மருந்துகள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும். சில நாடுகளில் உணவாக உண்ணப்படுகிறது. உடல் நச்சுநீக்கம், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை காரணமாக மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மீன் வளர்ப்பு தொழிலில் biofilter ஆகவும் உணவாகவும் பயன்படுகிறது.

4.சூழலியல் முக்கியத்துவம்: கடல்சூழலில் உயிர்களுக்கு உணவாகவும், மரபணு பாசியினங்களுக்கு உயிரியல் பிணைப்புகளை ஏற்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. ஆராய்ச்சி, தொழில்துறை பயன்பாடு மற்றும் உணவாக பெரிதும் பயனுள்ள ஒருவகை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com