வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் விலங்கினங்கள் தங்கள் குட்டிகளை எவ்வாறு ஈன்றெடுக்கின்றன என்பதைக் காட்டும் வீடியோக்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். பாலூட்டிகள் குட்டி போடுவது நமக்குத் தெரிந்த ஒன்று.
வேறு சில மிருகங்கள் வியப்பூட்டுவதாகத் தோன்றும் தனித்துவமான முறையில் தங்கள் குட்டிகளைப் பெற்றெடுக்கின்றன. அவ்வாறான ஆறு வகை மிருகங்கள் மற்றும் அவற்றின் குட்டிகள் எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றின விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
ஒட்டகச்சிவிங்கி நின்ற நிலையிலிருந்தே குட்டியைப் பிரசவிக்கிறது. குட்டி 6 அடி தூரத்தைக் கடந்து தரையை அடைகிறது. அந்த இடைவெளி, அது மூச்சு விடக் கற்றுக் கொள்ளவும், தொப்புள் கொடியிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
புதிதாய்ப் பிறந்த குட்டியானது சுமார் நூறு கிலோ எடையுடன் மற்ற ஜிராஃபிகளைப் பார்க்கக் கூடிய திறமையும் கொண்டிருக்கும். பிறந்த சில மணி நேரங்களில் நடக்கவும் செய்யும்.
மற்றொரு அதிசயிக்கத் தக்க விஷயம், ஆண் ஒட்டகச் சிவிங்கி தன் பார்ட்னருடன் இணைய விரும்பும்போது பெண்ணின் மூத்திரத்தை முகர்ந்து பார்த்து, பெண் அதற்குத் தயாரா என்பதைத் தெரிந்து கொள்ளுமாம்.
இந்தத் தவளை இனத்தில் கரு முட்டைகள் தயாரானதும், ஆண் தவளை, முட்டைகளைப் பெண்ணின் பின் புறத்தில் வைத்துவிடும்.
அதன் பின் ஒவ்வொரு முட்டையை சுற்றிலும் புதிதாக தோல் வளர்ந்து, அதைப் பாதுகாப்பாக மூடி வைத்துக் கொள்ளும். முட்டைக்குள் குஞ்சு வளர்ந்ததும், தோலைக் கிழித்துக் கொண்டு வெளி வந்துவிடும்.
பிளாட்டிபஸ், முட்டையிட்டுப் பால் கொடுக்கும் விலங்கு (Monotreme). பெண் பிளாட்டிபஸ் முட்டைகளை இட்டு, அவற்றைப் பத்திரமாக ஒரு குழிக்குள் மறைத்து வைத்துவிடும். முட்டையிலிருந்து குட்டிகள் வெளிவந்ததும், அவற்றிற்கு அம்மா பிளாட்டிபஸ் தன் தோலிலிருந்து சுரக்கும் பாலை ஊட்டி வளர்க்கும். இதன் முகத்தில் மூக்கு இருக்குமிடம் வாத்தின் அலகுபோல் இருப்பதால் இதற்கு 'வாத்தலகி' என்ற பெயரும் உண்டு.
இந்த இனத்தில் பெண், தான் இடும் முட்டைகளை ஆண் குதிரையின் உடலிலுள்ள ஒரு பை (pouch) யின் உள்ளே வைத்துவிடும். கர்ப்பம் சுமக்கும் ஆண் உடலிலிருந்து, சரியான நேரத்தில் ஆயிரக்கணக்கில் குட்டிகள் வெளி வந்து, கடலுக்குள் கலந்துவிடும். கடல் குதிரை இனத்தைச் சேர்ந்த, பைப்ஃபிஷ் (Pipefish) மற்றும் ஸீ டிராகன் (Sea Dragon) போன்றவைகளும் இனப் பெருக்கத்திற்கு இதே முறையைத்தான் பின்பற்றி வருகின்றன.
இந்த வகை மீன் இனத்தில் கருவுற்ற முட்டைகளை, சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரும் மாற்றி மாற்றித் தங்கள் வாய்க்குள் வைத்துப் பாதுகாக்கின்றன. இந்த முறையில் கர்ப்பம் சுமப்பதை மவுத்ப்ரூடிங் (Mouthbrooding) என அழைக்கின்றனர்.
முட்டைகளை சுமந்திருக்கும் காலத்தில் இம் மீன்கள் உணவு கூட உண்பதில்லை. உணவோடு சேர்த்து முட்டைகளையும் முழுங்கி விடுவோமோ என்ற ஜாக்கிரதை உணர்வுதான் இதற்கான காரணம்.
மிகத் தந்திரமான குணம் கொண்டது இந்த வகை மீன். சிச்லிட் மீன் முட்டையிடும்போது, கேட்ஃபிஷ் தன்னுடைய முட்டைகளையும் சிச்லிட் மீனின் முட்டைகளோடு கலந்து வைத்துவிடும். வித்யாசம் அறியாத சிச்லிட் எல்லா முட்டைகளையும் வாய்க்குள் சுமக்க ஆரம்பித்துவிடும்.கொஞ்சம் சீக்கிரமாகவே பொரித்துவிடும் கேட்ஃபிஷ் குட்டிகள், உள்ளேயே இருந்து, சிச்லிட் குஞ்சுகள் வெளிவரும்போது அவற்றை தின்றுவிடுவதும் உண்டு.
இப்படியொரு தந்திரமான வழியைப் பின்பற்றும் கேட்ஃபிஷ், பொறுப்பற்ற முறையில் தன் இனப் பெருக்க இயக்கத்தை நடத்திவிடுகிறது.