எரிமலையும், பூமியும்!

Volcano and the earth.
Volcano and the earth.
Published on

ரிமலைகள் நீண்ட காலமாகவே மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்ட, பிரம்மிக்கும் மற்றும் திகிலூட்டும் வரலாற்றைக் கொண்டுள்ளது. இவை இயற்கை அதிசயங்கள் மட்டுமல்ல, நமது கிரகத்தின் உள் செயல்பாட்டுகளிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது.

எரிமலைகள் நமது பூமியின் நடுப்பகுதியில் உள்ள உருகிய நிலையில் இருக்கும் லாவாக்களில் இருந்து பிறக்கின்றன. பூமியின் நடுப்பகுதியில் அதிகப்படியான வெப்பம் மற்றும் அழுத்தம் இருப்பதால், அது பாறைகளை உருக்கி, 'மாக்மா' எனப்படும் நெருப்புக் குழம்பை உருவாக்குகிறது. இது தன்னைச் சுற்றியுள்ள பாறையை விடவும் இலகுவானது என்பதால், பூமியின் மேற்பரப்பை நோக்கி தள்ளப்படுவதால் எரிமலைகள் பிறக்கிறது.

எரிமலைகளின் வகைகள்: பூமியில் உள்ள எரிமலைகள் பல வடிவங்களிலும் அளவுகளிலும் உள்ளன. ஆனால், அவை பொதுவாக மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  1. ஷீல்டு எரிமலைகள்: இவை பார்ப்பதற்கு சாய்ந்த மலைகளைப் போலவே இருக்கும் எரிமலைகள் ஆகும். இதற்கு சிறந்த உதாரணமாக ஹவாய் தீவில் உள்ள கேடய எரிமலைகளைக் கூறலாம்.

  2. கலப்பு எரிமலைகள்: இவை மிக உயரமான செங்குத்தான எரிமலைகள். அவ்வப்போது நடக்கும் எரிமலை வெடிப்புகளால் இவை உருவாக்கப்பட்டது. 'மௌண்ட் செயின் ஹெலன்' மற்றும் 'மவுண்ட் புஜி' ஆகியவை இந்த வகை எரிமலைகளுக்கு உதாரணமானவை.

  3. கூம்பு எரிமலைகள்: இவை சிறிய வகை செங்குத்தான எரிமலைகள் ஆகும். எரிமலை வெடிப்பின்போது வெளியேறிய சாம்பல்கள் மற்றும் பாறைகளால் ஆனவை. இவை சிறு சிறு எரிமலை வெடிப்பின் விளைவுகளால் உருவானவை.

பார்ப்பதற்கு எரிமலைகள் மிகவும் ஆபத்தானதாகத் தோன்றலாம். ஆனால், இவை பூமியின் மேற்பரப்பை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்றும் பல வழிகளில் நமது சுற்றுச்சூழலை பாதிக்கிறது. எரிமலைகளால்தான் பூமியில் புதிய நிலப்பரப்புகள் உருவாகின. இவை மலைகள், தீவுகள் மற்றும் பீடபூமிகளை உருவாக்கியது. அத்துடன் எரிமலை வெடிப்பின்போது வெளிவரும் சாம்பலில் பூமியில் வாழும் தாவரங்களுக்குத் தேவையான எல்லா விதமான தாதுக்களும் உள்ளன. காலப்போக்கில் இந்த எரிமலை சாம்பல் படிவுகள் பூமியின் மண்ணை வளப்படுத்தலாம்.

பெரிய எரிமலை வெடிப்புகளால் அதிக அளவு சல்பர் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் கலக்க வாய்ப்புள்ளது. 1815ம் ஆண்டு தாம்போரா எரிமலை வெடித்த பிறகு, பூமியின் ஒட்டுமொத்த காலநிலை தற்காலிகக் குளிர்ச்சியடைய இது வழிவகுத்தது. மேலும், எரிமலைகளில் உள்ள வெப்ப ஆற்றல், மின்சார உற்பத்தி மற்றும் சில வெப்பமூட்டும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

எரிமலைகள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை என்றாலும், புதிய நிலத்தை உருவாக்குதல், மண்ணின் வளம் மற்றும் ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றுக்கு இவை காரணமாக உள்ளன. எரிமலைகளை ஆராய்ச்சி செய்வதன் மூலமாகவே விஞ்ஞானிகள் பூமியின் செயல்பாடுகள் பற்றிய நுண்ணறிவைப் பெறுகிறார்கள். இது நமது கிரகத்தின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com