
தென்கிழக்கு ஆசியாவின் நடுவில், போர்னியோ மற்றும் சுலவேசி தீவுகள் உள்ளன. இந்த தீவுகள் சந்திக்கும் இடத்தில், ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லைக்கோடு இருக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விஞ்ஞானிகளை குழப்பி வரும் இந்த கோடு வாலஸ் கோடு என்று அழைக்கப்படுகிறது. இந்த இயற்கை எல்லை, இரண்டு முற்றிலும் மாறுபட்ட நிலப்பரப்புகளைப் பிரிக்கிறது.
இந்த வாலஸ் கோட்டை முதலில் ஆல்பிரட் ரஸ்ஸல் வாலஸ் என்ற பிரிட்டிஷ் இயற்கை ஆர்வலர் கண்டறிந்தார்.
இந்த இரண்டு தீவுகளும், முற்றிலும் மாறுபட்ட சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ளன. மலைத்தொடர்கள் அல்லது பாலைவனங்கள் போன்ற சில இயற்கை தடைகள் எளிதில் அடையாளம் காணக்கூடியவை. ஆனால், இந்த வாலஸ் கோடு கடலுக்கு அடியில் இருப்பதால், அசாதாரண தடைகளில் ஒன்றாக உள்ளது.
இது மக்கசார் ஜலசந்தியைப் பின்பற்றுகிறது. மக்கசார் ஜலசந்தியை பல மில்லியன் ஆண்டுகளாக நிலப்பரப்புகளைப் பிரித்துள்ள ஒரு ஆழமான கடல் அகழி.
இது ஒருபோதும் வறண்டுபோகாத அகழியாகும். இதன் விளைவாக, கோட்டின் ஒருபுறம் உள்ள இனங்கள் மறுபுறம் உள்ளவற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, இரண்டு தனித்துவமான பரிணாம வளர்ச்சிப் பாதைகளை உருவாக்குகின்றன.
அதோடு, இந்தக் கோட்டின் ஒருபுறம், ஆசிய நிலப்பரப்பில் சுதந்திரமாக நடமாடும் புலிகள், யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன. அதேசமயம், இதன் மறுபுறத்தில் சில மைல்களுக்கு அப்பால், கங்காருகள், காகடூக்கள் மற்றும் மார்சுபியல்கள் (குட்டிப்பைகளில் குட்டிகளைச் சுமக்கும் பாலூட்டிகள்) அதிகம் காணப்படுகின்றன.
இந்தக் கோட்டின் ஆசியப் பக்கம் ஹார்ன்பில்ஸ் மற்றும் ஃபெசன்ட்ஸ் போன்ற பறவைகளின் தாயகமாகும். அதேசமயம் ஆஸ்திரேலியப் பக்கம் காகடூக்கள் மற்றும் கிளிகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த உயிரினங்கள் குறிப்பிட்ட வாழ்விடங்கள் மற்றும் உணவு ஆதாரங்களைச் சார்ந்துள்ளன.
இந்த ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய இனங்கள், கடலைக் கடக்க முடிந்தாலும், அவை பெரும்பாலும் அடுத்த பக்கம் செல்லும்போது, அந்தந்த இடங்களின் உணவு கிடைக்கும் தன்மை, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு, கோட்டின் இருபுறமும் இடம்பெயர சிரமப்படுகின்றன. உயிர்வாழவும் போராடுகின்றன.
வாலஸ் கோடு புவியியல், காலநிலை மற்றும் சூழ்நிலை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட பரிணாம வளர்ச்சி ஆகும். மேலும், இது பூமியின் மிகவும் கவர்ச்சிகரமான இயற்கை எல்லைகளில் ஒன்றாகும்.