குளவிகள்: இயற்கையின் சிறிய கட்டடக் கலைஞர்கள்!

Wasps: Nature's Little Architects.
Wasps: Nature's Little Architects.
Published on

பூச்சிகள் என்றதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மென்மையான பட்டாம்பூச்சி அல்லது ரீங்காரமிடும் தேனீக்கள்தான். ஆனால் இயற்கையுலகில் யாரும் அறியாத அற்புதமான பாத்திரத்தை குளவிகள் வகிக்கின்றன. அவை மக்களால் பெரும்பாலும் கவனிக்கப்படாமலே போய்விடுகின்றன. நீங்கள் நினைப்பது போல் குளவிகள் உங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பூச்சிகள் அல்ல. அவை ஓர் அற்புதமான உயிரினம்.

ஆச்சரியமூட்டும் குளவிகளின் பண்புகள்: எறும்புகள், தேனீக்கள் மற்றும் பிற பூச்சிகளை உள்ளடக்கிய Hymenoptera வகையைச் சேர்ந்தவை இந்த குளவிகள். இதுவரை குளவிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் பல இனங்கள் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கின்றன. இந்த இனங்களை இரண்டு முக்கிய குழுக்களாகப் பிரிக்கலாம். தனி குளவிகள் மற்றும் சமூகக் குளவிகள்.

தனிக் குளவிகள்: அதன் பெயரைப் போலவே தனியாக வாழ்ந்து வேட்டையாடும். இவை பெரும்பாலும் தங்களின் கூடுகளில் புழுக்கள் மற்றும் பூச்சிகளை சேர்த்து, தன் இனத்தை வளர்ப்பதைக் காணலாம். இந்த குளவிகளே பூச்சிக் கட்டுப்பாட்டுக்கு அவசியமாகிறது. ஏனெனில், அவை பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை வேட்டையாடுகின்றன.

சமூகக் குளவிகள்: இவை கூட்டமாக காலனி அமைத்து வாழ்பவை. ஹார்னெட், யெல்லோ ஜாக்கெட் மற்றும் பேப்பர் குளவிகள் சமூகக் குளவிகளுக்கு எடுத்துக்காட்டுகள். இந்த இனங்கள் தங்களின் உமிழ்நீருடன் கலந்து மெல்லப்பட்ட மர இழைகளில் இருந்து கூடுகளை உருவாக்கி, அவற்றின் முட்டைகளுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. இவற்றின் கட்டுமானமுறை ஒரு தொழில்முறை கட்டடக்கலைஞரின் வடிவமைப்பு போலவே இருக்கும்.

தேனீக்கள் மிகச் சிறந்த மகரந்த சேர்க்கையாளர்கள். பூவிலுள்ள மகரந்தத்தை மற்றும் பூக்களுக்கு கடத்தும் வேலையை இவை செய்கின்றன. மனிதர்கள் உட்பட எண்ணற்ற உயிரினங்களுக்கு உணவாக இருக்கும் பழங்கள் மற்றும் விதைகளை உற்பத்தி செய்ய இவை பெரிதும் உதவுகின்றன.

குளவிகள் ஏராளமான பூச்சிகளை வேட்டையாடும். இதனால் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்குகளை இவை வகிக்கின்றன. இவை கம்பளிப் பூச்சிகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தும் பிற பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனால் ரசாயன பூச்சிக்கொல்லியின் தேவை குறைந்து விவசாயிகளுக்கு நன்மை புரிகிறது.

குளவிகள் இயற்கையுலகுக்கு ஆற்றும் பணியை நாம் பாராட்ட வேண்டும். இந்த உலகிற்கு அவை வழங்கும் சேவைகளை கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும். அடுத்த முறை நீங்கள் ஒரு குளவியை பார்க்கும்போது பயந்து பார்க்காமல், அவை நமது கிரகத்தின் பல்லுயிர் பெருக்கத்தின் பிரம்மாண்ட உயிரினம் என எண்ணி வியந்து பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com