இழப்பு இல்லாமல் கரும்பைக் காக்கும் வழிகள்!

இழப்பு இல்லாமல் கரும்பைக் காக்கும் வழிகள்!

ர்க்கரை உற்பத்திக்கு கரும்பு முக்கிய மூலப்பொருளாக இருப்பதால் கரும்பு அனைத்துக் காலங்களுக்கும் தேவையான முக்கியமான விளை பொருளாக உள்ளது. அதிலும், ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வர இருப்பதால், பொங்கல் பண்டிகைக்கு வைத்து வழிபட செங்கரும்பு பயிர் நடவுக்கு விவசாயிகள் தற்போதே ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் பொதுவாக, கரும்பு பயிர் முக்கிய விளைச்சலாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்றுகட்டமாக நடவு செய்யப்படுகிறது. இந்த மூன்றுகட்ட கரும்பு நடவில், நடுக்கட்டமாக பிப்ரவரி முதல் மார்ச் வரையும், பின்கட்டமாக ஏப்ரல் முதல் மே வரையும் மற்றும் தனிகட்டமாக ஜூன் முதல் ஜூலை வரையும் நடவு செய்யப்படுகிறது.

மேலும், கரும்பு விவசாயத்தில் தற்போது முக்கிய பிரச்னையாக மாறியுள்ள தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய எத்தனால் அல்லது சுண்ணாம்புக் கரைசலை தண்ணீரில் கரைத்து அதில் கிடைக்கும் கரைசலுடன் விதைக் கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து அவற்றை ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக, கடைசி உழவுக்கு முன் ஒரு ஹெக்டேருக்கு 20 டன் மக்கிய தேங்காய் நார்க்கழிவு இட்டு நிலத்தில் நன்கு கலந்து, பின்பு சாகுபடி செய்வதால் மண்ணின் ஈரம் 100 சதவிகிதம் அதிகரிக்கும். இதனால் மண்ணில் ஈரத்தன்மை அதிக நாள் இருக்கும். பூமி வறட்சியும் தடுக்கப்படும். மேலும், கரும்பாலை கழிவை கடைசி உழவின்போது மண்ணுடன் கலந்து பின் நடவு செய்தால் மண்ணின் கட்டமைப்பு மேம்படும். மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன் அதிகரிக்கும்.

இதனோடு, 30 செ.மீ. ஆழத்தில் 80 செ.மீ. இடைவெளியில் நடவுக் குழிகளில் கரும்பை நடவு செய்வதால் பயிர் நன்கு வளரும்பொழுதே பிடிமானமும் நன்கு ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு இழப்வு என்ற இடர்பாடு நீங்கி லாபம் மேம்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com