வித்தியாசமான உயிரினம்… இது நரியா, இல்ல புலியா? 

Tasmanian Tiger
Tasmanian Tiger
Published on

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த டாஸ்மேனியன் டைகர் (Tasmanian Tiger) முற்றிலுமாக அழிந்து போன ஒரு மர்மமான உயிரினம். அதன் தனித்துவமான தோற்றமும், மர்மமான வாழ்க்கை முறையும் இன்றும் பலரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்தப் பதிவில் டாஸ்மேனியன் டைகர் பற்றிய பல அறியப்படாத உண்மைகளை முழுமையாகப் பார்க்கலாம்.‌

இது தன் தோற்றத்தால் பலரையும் கவர்ந்த உயிரினம். இது ஒரு மாசுபியல் (Marsupial) விலங்கு. அதாவது தன் குட்டிகளை ஒரு பையில் சுமக்கும். அதன் உடல் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளால் அழகாக வரையப்பட்டது போல் இருக்கும்.‌ அதன் முதுகுப் பகுதியில் அமைந்திருக்கும் கருப்பு கோடுகள் புலிகளின் உடலை போல இருப்பதால் ‘டாஸ்மேனியன் டைகர்’ எனப் பெயர் ஏற்பட்டது. ஆனால், இது உண்மையில் புலிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. 

டாஸ்மேனியன் டைகர் ஆஸ்திரேலியாவின் ‘டாஸ்மேனியா’ தீவில் அதிக அளவில் காணப்பட்டன. இவை காடுகள், புல்வெளிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வாழ்ந்தன. இந்த விலங்கு ஒரு அனைத்துண்ணி. அதாவது இறைச்சி, தாவரங்கள் என அனைத்தையும் உண்டு வாழும்.‌ குறிப்பாக கங்காரு, பறவைகள், பழங்கள், வேர்கள் போன்றவற்றை அதிகமாக உண்ணும். 

இந்த தனித்துவமான விலங்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முற்றிலுமாக அழிந்து போனது. மனிதர்களால் அதிக அளவில் வேட்டையாடப்பட்டதே இந்த விலங்கு அழிவிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இவை கால்நடைகளை வேட்டையாடியதால், விவசாயிகள் இவற்றை கொன்று குவித்தனர். மேலும், இவற்றைத் தாக்கும் நோய்கள் அதிகமாகப் பரவியதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
விஷ பாம்புகள் தன்னை தீண்டச் செய்து உயிர் துறந்தாரா கிளியோபட்ரா?
Tasmanian Tiger

டாஸ்மேனியன் டைகர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விஞ்ஞானிகள் இதன் மரபணுவைப் பயன்படுத்தி, இந்த விலங்கை மீண்டும் கொண்டு வர முயன்று வருகின்றனர். ஒருவேளை இந்த முயற்சி வெற்றி பெற்றால், அழிந்துபோன ஒரு உயிரினத்தை மீண்டும் கொண்டு வந்த முதல் சம்பவமாக அது அமையும். 

மனிதர்களின் செயல்களால் ஒரு இனம் அழிந்துபோனது நமக்கு பாடத்தைக் கற்பிக்கிறது. அதாவது, இந்த இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும். இல்லையேல், பல்வேறு விதமான மனித செயல்பாடுகளால், உலகின் பல அழகான உயிரினங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com