உங்களை ஒரு திமிங்கலம் விழுங்கினால் என்ன ஆவீர்கள் தெரியுமா? இப்படி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? திமிங்கலத்தால் விழுங்கப்படுவதை நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. இப்படி நடப்பது மிகவும் அரிதானது என்றாலும், திமிங்கலத்தால் விழுங்கப்பட்டு பிழைத்து வந்தவர்களும் இருக்கின்றனர். உண்மையில் ஒரு மனிதனை திமிங்கலம் விழுங்கினால் என்ன நடக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திமிங்கலங்கள், குறிப்பாக நீலத்துமிங்கலங்கள் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் இனங்களாகும். இவற்றிற்கு மனிதனை விழுங்கும் அளவுக்கு பெரிய தொண்டைகள் இருந்தாலும், மனிதர்கள் திமிங்கலத்தின் உணவு வகையில் வர மாட்டார்கள் என்பதால், வாய்க்குள் போனதும் திமிங்கலங்கள் உடனடியாக மனிதர்களை வெளியேற்றிவிடும் வாய்ப்புள்ளது.
சில அசாதாரண சூழ்நிலைகளில் ஒரு மனிதனை திமிங்கலம் விழுங்கினால், அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஏனெனில் திமிங்கலத்தின் வயிறு மனிதர்கள் வாழ்வதற்கான ஏற்ற இடம் அல்ல. அதிக அமிலத்தன்மை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் குறுகிய இடம் ஆகியவை மனிதன் நீண்ட நேரம் உயிர் பிழைத்திருப்பதை சாத்தியமற்றதாக்குகிறது.
அதேபோல ஒரு மனிதன் திமிங்கலத்தால் விழுங்கப்படாமல் அதன் வாயில் சிக்கினாலும் கடுமையான காயங்களை அடையும் வாய்ப்புள்ளது. திமிங்கலத்தின் பெரிய சக்தி வாய்ந்த தாடைகள் மற்றும் கூர்மையான பற்கள் ஒரு நபருக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும். என்னதான் திமிங்கலங்களின் பற்கள் மென்மையானதாக இருந்தாலும், அவற்றின் தாடையின் வலிமை காரணமாக எலும்பு முறிவு அல்லது உள் காயங்கள் ஏற்படலாம்.
திமிங்கலத்தின் வாயில் சிக்கிய நபரை அதுவாக வெளியே துப்பாத வரை காப்பாற்றுவது கடினம். அப்படியே அவர் வெளியேற்றப்பட்டாலும், உடனடி மருத்துவம் சிகிச்சைகள் தேவைப்படலாம். திமிங்கலத்தால் தாக்கப்படுவது அரிதானது என்றாலும், ஒருவேளை தவறுதலாக அதன் வாயில் சிக்கிக் கொண்டால் விளைவுகள் உண்மையிலேயே மோசமானதாக இருக்கும்.
திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்ட இனங்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றின் நடமாட்டம் இருக்கும் பகுதிகளுக்கு மனிதர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இந்த பிரம்மாண்ட உயிரினங்கள் யாருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாமல் தனியாக வாழ்வதையே அதிகம் விரும்புகின்றன. எனவே அவற்றிற்கு இடையூறு எதையும் ஏற்படுத்தாமல் மனிதர்கள் இருப்பது நல்லது.
ஒருவேளை நீங்கள் தவறுதலாக திமிங்கலத்தின் வாயில் சிக்கிக் கொண்டால் தப்பிக்க என்ன செய்வீர்கள்? என்பதை கமெண்ட் செய்யவும்.