பறவை என்ற இனம் இல்லையென்றால் என்ன ஆகும்?

Earth and Birds
Earth and Birds

பறவைகள் நம்முடைய வாழ்க்கையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. சாதாரண ஒரு பூச்சியை உட்கொள்ளுவத்திலிருந்து, ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாறுவதிலிருந்து பறவைகள் செய்யும் அனைத்து செயல்களும் நமக்கு ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு வேளை பறவை இனம் என்பதே இல்லையென்றால் நம் மனிதகுலம் என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ளும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.     

பூச்சி கட்டுப்பாடு:

பல பறவைகளின் உணவின் முதன்மை ஆதாரம் பூச்சிகள் ஆகும், அவை பூச்சி தொற்றுகளால் பயிர்கள் மற்றும் மரங்களின் இழப்பைக் குறைப்பதில் மிகப்பெரிய நன்மையை பறவைகள் நமக்கு தருகின்றன. கிரமபுறங்களில் மக்களின் நிலையான சொத்தே விவசாயம் தான், விளைநிலங்களில் அவர்கள் வைக்கும் அனைத்து பயிர்களும் சொன்ன தேதியில் விளைந்தால் தான், அவர்களுக்கு வருமானத்திற்கான உத்தரவாதமே உண்டாகும். ஆனால் அது எளிதில் நடக்குமா என்றால் இல்லை. காரணம் இதற்கு இடையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் காலநிலை மாற்றங்கள் மற்றும் பூச்சிகளால் அவர்களுக்கு உண்டாகும் இழப்புகள். பறவைகள் இல்லாவிட்டால், பூச்சிக் கட்டுப்பாடு இருக்காது. இதனால் பல தாவரங்கள் மற்றும் மரங்கள் அழிக்கப்பட்டு, மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும். இது காலப்போக்கில் விவசாயிகளை அதிக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த நிர்பந்தித்து, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நமது உணவு விநியோகத்தை மேலும் சீரழிக்கும்.

விதைகளை பரப்புபவர்கள்:

விதை பரவலில் பறவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு பறவை நிலத்தில் சுற்றித்திரிந்து விதைகள் அடங்கிய பழங்களை உட்கொண்டு, நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் பயணித்து, மேலே இருந்து அதன் எச்சங்களை’பறக்கும் விதை மூட்டைகளாக’ ஆங்காங்கே போடுவதால், இந்த விதைகள் பின்னர் மரங்களாக வளர உதவிசெய்கின்றன. ஆயிரக்கணக்கான பறவைகள் கோடி கணக்கில் பறக்கும் விதை மூட்டைகளை போட்டால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள், ‘எதிர்காலத்தில் அங்கே ஒரு காடே வளர்ந்திருக்கும்’. ஆகையால் பறவைகள் இல்லாமல், இந்த செயல்முறை முற்றிலும் சீர்குலைந்து, காடுகளின் வளர்ச்சி மற்றும் தாவர பன்முகத்தன்மையை பாதித்து நம் சமுதாயத்திற்கு பெரும் அழிவை உண்டாக்கிவிடும்.

மகரந்தச் சேர்க்கை( Pollination):

தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளால் மகரந்த சேர்க்கையானது பெருமளவில் நடைபெறுகிறது. பறவைகளும்  மகரந்தச் சேர்க்கைக்கு தங்கள் பங்கை தருகின்றன; பூச்சிகளை விட குறைந்த அளவில். அவை பூக்களைப் பார்வையிடுகின்றன என்றாலும்,  மகரந்த சேர்க்கையில் பறவைகளுக்கும் சிறு பங்கு உண்டு. பறவைகள் இல்லாவிட்டால், அவை வழங்கும் 3-5% மகரந்தச் சேர்க்கையும் தடைபட்டு, இது பொருளாதார ரீதியாக முக்கியமான பயிர்கள் மற்றும் மருத்துவ தாவரங்களை பாதிக்கச் செய்யும்.

இதையும் படியுங்கள்:
வெப்பம் நம்மை மட்டுமா சுடும்? ஐந்தறிவு ஜீவன்கள் என்ன செய்யும்?
Earth and Birds

மண்வள சுழற்சி:

பறவைகள் பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து சுழற்சியில் பங்களிக்கின்றன. அவைகள் வெளியேற்றும் கழிவுகளால் மண்ணை வளப்படுகின்றன. பறவைகள் இல்லாவிட்டால், இந்த  ஒட்டுமொத்த செயல்முறையும்  தடைபட்டு சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை தரும்.   

ஆகையால் நம் இருப்பிடத்தை சுற்றி பறவைகள் இல்லையென்றால், அந்த இடம் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டதற்கு அறிகுறியாகும். ஒருவேளை அவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வானிலை காரணமாக அவை வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாம். இரண்டிலும், இந்த இறகுகள் கொண்ட உயிரினங்கள் இல்லாத தருணத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டியது நாம் கவலைபடக்குரிய நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதே. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com