உலகின் அடுத்த பேரழிவு எப்போது?

Mass Extinction
Mass Extinction

பேரழிவு எனப்படும் Mass Extinction என்றால் குறுகிய காலத்தில் அதிக உயிர்கள் ஒட்டுமொத்தமாக அழியும் சம்பவமாகும். இவ்வுலகில் முதல் உயிரானது, 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மின்னல் வெடிப்பினால் உருவானது என்று கூறப்படுகிறது. அன்றுதொட்டு இன்றுவரை, கிட்டத்தட்ட ஐந்து பேரழிவுகள் இவ்வுலகில் நிகழ்ந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாம் தற்போது ஆறாவது பேரழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் பேரழிவுக்கு மனிதர்கள்தான் காரணமாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதுவரை நடந்த ஐந்து பேரழிவுகள் பற்றி சற்று அறிந்து கொள்வோம். தமிழில் இதற்கு சரியான பெயர்கள் தெரியாததால் ஆங்கிலத்திலேயே குறிப்பிடுகிறேன்.

Ordovician-silurian Extinction
Ordovician-silurian Extinction

1. Ordovician - silurian Extinction: இது சுமார் 445 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது. இதற்குக் காரணமாக அமைந்தது டெக்டானிக் பிளேட் நகர்வினால் திடீரென கடல் நீர்மட்டம் குறைந்தது. இதனால் அதிகப்படியான கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தன.

Devonian Extinction
Devonian Extinction

2. Devonian Extinction: இது 365 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது. இதில் சுமார் 75 சதவீதத்திற்கும் அதிகமான உயிரினங்கள் பூமியிலிருந்து அழிந்தன. இதிலும் அதிகம் அழிந்தது கடல்வாழ் உயிரினங்கள்தான். காலநிலை மாற்றம், ஆக்சிஜன் குறைபாடு தாவரங்களின் அதிக வளர்ச்சியால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டு இந்த நிலை ஏற்பட்டது.

PERMIAN-TRIASSIC Extinction
PERMIAN-TRIASSIC Extinction

3. PERMIAN - TRIASSIC Extinction: இது 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு. இந்த நிகழ்வில்தான் அதிகப்படியான இனங்கள் அழிந்துபோயின. இதற்கு காலநிலை மாற்றம், எரிகற்கள் மற்றும் எரிமலை வெடிப்பினால் கடற்பரப்பில் உருவான விஷ வாயுக்கள் போன்றவை காரணமாக அமைந்தன.

Triassic-Jurassic Extinction
Triassic-Jurassic Extinction

4. Triassic - Jurassic Extinction: இந்த நிகழ்வு 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் பூமியில் இருந்த 80 சதவீத உயிரினங்கள் அழிந்தன. குறிப்பாக, கடல்வாழ் உயிரினங்கள். இதுவும் காலநிலை மாற்றம், எரிமலை வெடிப்புகளினாலேயே ஏற்பட்டது. இதில் பல கடல் ஊர்வன உயிரினங்கள் காணாமல் போயின.

Cretaceous-tertiary Extinction
Cretaceous-tertiary Extinction

5. Cretaceous - tertiary Extinction: இது 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது. இது எரி கற்களின் தாக்குதலினால் ஏற்பட்ட காட்டு தீ, சுனாமி மற்றும் தீவிர காலநிலை மாற்றங்களால் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சீர்குலைவினால் ஏற்பட்டது. இந்த நிகழ்வில்தான் டைனோசர் இனம் முழுமையாக அழிந்தது. மேலும், மற்ற பல இனங்களும் இருந்த இடம் தெரியாமல் போயின.

அடுத்ததாக, வரவிருக்கும் பேரழிவு, Holocene Extinction என்று கூறப்படுகிறது. இது எப்போது நிகழும் என்றால், நம் தற்போதே அந்த அழிவில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. இந்த நிகழ்வானது 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு முழு காரணமாக இருப்பது மனிதர்கள்தான். பல உயிரினங்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஒரு உயிரினமாக மனித இனம் தற்போது திகழ்ந்து வருகிறது. நம்முடைய சுய லபத்திற்காக பல விலங்குகள் மற்றும் தாவரங்களை அழிவின் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டோம். தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் என்கிற பெயர்களில், உலக வெப்பமயமாதலுக்குக் காரணமாக இருக்கிறோம். இது நேரடியாக ஒருநாள் நம்முடைய அழிவிற்கு காரணமாக இருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இதை உணர்ந்து தற்போதிலிருந்து நாம் எச்சரிக்கையுடன் செயல்பட்டோமேயானால், இந்த அழிவை ஒரு 100, 200,1000 ஆண்டுகளுக்குத் தள்ளிப்படலாம். ஆனால், இதை யாராலும் தடுக்க முடியாது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழப்போகும் நூறு ஆண்டுகளில் மட்டும் கவனம் செலுத்தாதீர்கள். இன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், நம் எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கிறது என்பதை உணருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com