சித்திரை-வைகாசியில் வெயில் வாட்டி வதைக்க காரணம் என்ன?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.
summer Heat
summer Heat
Published on

கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொழுத்த தொடங்கி விடுகிறது. முன்பெல்லாம். ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை தான் வெயிலின் தாக்கம் இருக்கும். ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி வழக்கமாக ‘அக்னி’ நட்சத்திரம் தொடங்கிய பின்னர் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, திருவண்ணாமலையில், வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் சாலையில் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெண்கள் கைக்குட்டை மற்றும் துப்பட்டாவால் முகத்தை மூடியபடியும், பொதுமக்கள் சாலைகளில் குடை பிடித்தபடியும் நடந்து செல்வதை காணமுடிந்தது.

வெயிலின் தாக்கத்தால் முக்கிய சாலைகளில் கானல் நீர் தோன்றியது. வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வியர்வை மழையில் நனைந்தவாறு சாலையோரம் உள்ள மரத்தின் நிழலில் தஞ்சம் அடைந்தனர்.

சுட்டெரிக்கும் வெயிலால் வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி., ஏர்கூலர்களை ஓய்வு இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

‘அக்னி’ நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தி வருவதால் ‘அக்னி’ நட்சத்திரம் தொடங்கிய பின் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்குமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கொளுத்தும் வெய்யில் - அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவேயில்லையே.. அதுக்குள்ளேயா? புலம்ப வைக்கும் ஹாட் சம்மர்!
summer Heat

இந்நிலையில் சித்திரை-வைகாசியில் வெயில் ஏன் வாட்டி வதைக்கிறது? பாரம்பரிய பருவமும், அறிவியல் காரணமும் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

இளவேனில் கோடை காலம் 2 மாதம் இருந்தாலும் அதில் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயிலின் காலத்தில் வெயிலின் கொடூரம் இன்னும் உக்கிரமாக இருக்கும்.

இந்த ஆண்டு கத்திரி வெயில், அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைகிறது. அன்றைய காலகட்டத்தில் வழக்கத்தைவிட வெயில் மிக அதிக அளவில் இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கத்திரி வெயிலின்போது, மழை பெய்த நிகழ்வுகளும் நடந்துள்ளன. எனவே இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பது போக, போக தெரியும்.

நாம் வாழும் பூமியில் வெயில், மழை, குளிர் என மாறி மாறி பருவங்கள் வருவதற்கு பூமியின் சுழற்சிதான் காரணம். பூமி தன்னை தானே சுற்றிக்கொண்டு, சூரியனை ஒரு முறை முழுமையாக சுற்றி முடிக்க 365 நாட்கள் 5 மணி நேரம் 48 நிமிடம் 45 வினாடிகள் ஆகிறது. இது சுமார் 365.2422 நாட்கள் என்று கணக்கிடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?
summer Heat

ஆனால் நாம் பயன்படுத்தும் கிரெகோரியன் நாட்காட்டியில், ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள்தான் இருக்கும். அந்த கூடுதல் 0.2422 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் சேரச் சேர, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் ஒரு நாளைச் சேர்க்கிறோம். அது தான் லீப் ஆண்டு என சொல்கிறோம். அந்த ஆண்டில் தான் பிப்ரவரி மாதத்தில் 29-ந் தேதி வரும்.

இந்த பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உருவாகும் கால மாற்றங்களை தங்களது நாட்டிற்கு ஏற்ப ஒவ்வொரு இனமும் பண்டைய காலத்திலேயே உருவாக்கி வைத்தனர். அதன்படி, தமிழர்களை பொறுத்தவரை ஒரு ஆண்டில் உள்ள 12 தமிழ் மாதங்களை 6 பருவங்களாக பிரித்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாசி), குளிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) ஆகும். சரி, இதில் இளவேனில் காலத்தில் மட்டும் ஏன் அதிக வெயில் அடிக்கிறது? பூமியின் சுழற்சிக்கு ஏற்பத்தான் காலநிலைகள் மாறுகிறது.

இதையும் படியுங்கள்:
வெயில் வருது... வெயில் வருது... உஷாராகுங்கோ!
summer Heat

ஆனால் அதில் ஆச்சரியப்பட வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. அதாவது தமிழகத்தின் கோடை காலமான இளவேனில் காலத்தில் பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள இடைவெளி 15.2 கோடி கிலோ மீட்டர். ஆனால் அதுவே குளிர்காலமான முன்பனி காலத்தில் வெறும் 14.7 கோடி கிலோ மீட்டர்தான்.

அதில் இருந்து தெளிவாக தெரிவது? பூமிக்கு அருகில் சூரியன் வரும்போது குளிர்காலமான முன்பனி பருவமும், பூமிக்கு தூரத்தில் சூரியன் இருக்கும்போது கோடை காலமான இளவேனில் பருவமும் இருக்கிறது.

பூமிக்கு அருகில் சூரியன் இருக்கும்போது தானே வெயில் அதிகமாக இருக்க வேண்டும்? இது தான் இயற்கையின் அதிசயம். பூமி சூரியனை சுற்றி வரும்போது, பூமிக்கும்-சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கால நிலையை முடிவு செய்வதில்லை. மாறாக பூமியின் சாய்வு நிலைதான் முடிவு செய்கிறது. அதாவது வெயிலின் அளவை தீர்மானிக்கிற முக்கிய காரணம், சூரியக் கதிர்கள் எப்படி பூமியில் விழுகிறது என்பதே. சூரியனின் தொலைவு அல்ல.

தமிழகத்தின் இளவேனில் காலத்தில் சூரியன் சற்றே தூரமாக இருந்தாலும், அதன் கதிர்கள் பூமியின் மீது நேராக விழுவதால் வெப்பம் அதிகமாகிறது. அதுவே முன்பனி காலத்தில் பூமிக்கும், சூரியனுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்தாலும், அப்போது சூரிய கதிர்கள் சாய்வு நிலையில் தான் பூமியில் விழுகின்றன. அதனால் வெப்பம் குறைந்து, குளிர்ச்சியான காலநிலை உருவாகிறது.

இந்த அறிவியல் அடிப்படையில தான் சித்திரை-வைகாசி மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

இதையும் படியுங்கள்:
வெயில் அதிகரிக்கும்... வெளியே போகாதீங்க! வானிலை மையம் எச்சரிக்கை!
summer Heat

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com