ஓ! இதனாலதான் கடல் ஆமைகள் முட்டையிட நிலத்துக்கு வருதா?

Sea Turtles.
Sea Turtles.
Published on

கடலில் வாழும் ஆமைகள் அங்கேயே முட்டையிடாமல் நிலத்திற்கு வந்து உயிரை பணயம் வைத்து முட்டையிடும் காணொளியை உங்களில் பலர் கண்டு ரசித்திருப்பீர்கள். ஆனால் அந்த ஆமைகள் ஏன் அப்படி செய்ய வேண்டும் என எப்போதாவது யோசித்ததுண்டா? தங்களின் இனப்பெருக்கச் செயலுக்காக அவை ஏன் நிலத்தை தேர்வு செய்கின்றன?. இவற்றின் இந்த நடத்தைக்குப் பின்னால் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அவை என்னவென்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். 

கடல் ஆமைகள் ஏன் நிலத்திற்கு வந்து முட்டை இடுகின்றது என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முதலில் அவற்றின் பரிணாம வளர்ச்சி எங்கு தொடங்கியது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது தற்போது கடலில் வாழும் ஆமைகளின் மூதாதையர்கள் நிலத்தில் வாழ்ந்த ஊரவன வகைகள் ஆகும். 220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடல் ஆமைகளின் மூதாதையர்கள் நிலத்திலேயே முட்டை இட்டு தன் சந்ததியை வளர்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த பண்புதான் கடல் ஆமைகளுக்கும் தற்போது கடத்தப்பட்டுள்ளது.

அதேபோல கடல் ஆமைகள் நிலத்தில் முட்டையிடுவதற்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுவது, கடலில் அவற்றின் முட்டைகளுக்கான ஆபத்து மிகவும் அதிகம். நீரில் அதன் முட்டைகளைக் காப்பது முற்றிலும் கடுமையானது. இதனாலேயே கடல் ஆமைகள் முட்டையிடுவதற்கு கடற்கரைக்கு வருகின்றன. 

கடற்கரையில் பிறக்கும் பெண் ஆமைகள், கூடுகட்டி முட்டையிட்டு தன் இனத்தை பாதுகாப்பதற்கு கடற்கரை தான் சரியான தேர்வு என்பது பிறக்கும்போதே அவற்றிற்கு பதிந்து விடுவதால், அவற்றின் நடத்தை தலைமுறை தலைமுறையாக கடல் ஆமைகள் முட்டையிடுவதற்கு மணலையே தகுந்த இடமாகக் கருதுகிறது. 

இறுதியாக முட்டைகள் பொரிப்பதற்கு சரியான வெப்பநிலை முக்கியம். கடலில் அத்தகைய வெப்பநிலை இல்லை என்பதால், கடல் ஆமை கருவின் வளர்ச்சிக்கு நிலப்பரப்பு இயற்கையான இன்குபேட்டர்களாக செயல்படுகிறது. அதேபோல மாறுபட்ட வெப்பநிலை, கடல் ஆமைகளின் பாலினத்தை நிர்ணயம் செய்கிறது. 

இதையும் படியுங்கள்:
அச்சுறுத்தலாக மாறி வரும் நிஞ்ஜா ஆமைகள்!
Sea Turtles.

இப்படி பல காரணங்களுக்காக கடல் ஆமைகள் தங்கள் வாழும் கடலை விட்டு நிலப்பரப்புக்கு வந்து முட்டையிட்டு தன் சந்ததியை வளர்க்கிறது. இந்த பிரமிப்பூட்டம் இயற்கை நிகழ்வை நாம் காணும்போது அவற்றின் வாழ்வில் அசாதாரணமாக பங்கு வகிக்கும் சுற்றுச்சூழல், பரிணாம காரணிகள் மற்றும் உயிரியல் போன்றவை நம்மை வியக்கச் செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com