600 வருட சரித்திரம்! பூமிப்பந்தில் இப்படியொரு அதிசயம்! ஹைப்பரியன் மரம் சொல்லும் மர்மங்கள்!

2019-ல் இதோட உயரம் அளவிடப்பட்டு, கின்னஸ் உலக சாதனையா பதிவாச்சு.
Hyperion tree
Hyperion treeImg Credit: National Geographic Society
Published on

மனிதன் ஸ்கை ஸ்க்ராப்பர்கள் கட்டி, ஆயிரம் ஆட்கள், கோடிக் கணக்கில் செலவுகள், மாதக்கணக்கு உழைப்புன்னு பிரமிச்சு போயிருக்கோம். ஆனா, இயற்கை ஒரே ஒரு மரத்தை வச்சு, "நானும் சும்மா இல்லை!"ன்னு உலகத்தை ஆச்சரியப்படுத்துது.

ஹைப்பரியன், உலகின் உயரமான மரம், 116.07 மீட்டர் (380.8 அடி) உயரத்தோட கலிபோர்னியாவின் ரெட்வுட் தேசிய பூங்காவில் கம்பீரமா நிக்குது. இந்த கோஸ்ட் ரெட்வுட் (Sequoia sempervirens) மரம், 600-800 வருஷமா இயற்கையோட காவியமா வளர்ந்து, புவியோட வரலாற்றை பறைசாற்றுது.

2006-ல் இயற்கை ஆர்வலர்களான கிறிஸ் அட்கின்ஸ் மற்றும் மைக்கேல் டெய்லர், ரெட்வுட் பூங்காவின் தனிமையான பகுதியில் இந்த மரத்தைக் கண்டுபிடிச்சாங்க. 2019-ல் இதோட உயரம் அளவிடப்பட்டு, கின்னஸ் உலக சாதனையா பதிவாச்சு.

ஆனா, இதோட இருப்பிடத்தை ரகசியமா வச்சிருக்காங்க, ஏன்னா மக்கள் கூட்டம் வந்து மரத்தையும் அதோட சுற்றுச்சூழலையும் கெடுத்துடக் கூடாது பாருங்க. ஸ்மித்சோனியன் இதழ் சொல்ற மாதிரி, இந்த மரத்தை பாதுகாக்குறது இயற்கையோட பொக்கிஷத்தை காப்பாத்துற மாதிரி.

2022-ல், ஹைப்பரியனைச் சுத்தி இருக்குற பகுதியை மூடிட்டாங்க, ஏன்னா பயணிகள் புல், புதர், மண்ணை மிதிச்சு, குப்பை போட்டு சேதப்படுத்தினாங்க. இப்போ அங்க போனா, 5,000 டாலர் அபராதமும், ஆறு மாசம் ஜெயிலும் கிடைக்கும்!

Hyperion tree
Hyperion tree

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை சொல்ற மாதிரி, மனித கழிவுகளும், குப்பைகளும் இந்த மரத்தோட அடிப்பகுதியை பாழ்படுத்தியிருக்கு. ஆனாலும், இயற்கையோட வலிமையை ஹைப்பரியன் உலகுக்கு காட்டி, "நான் இன்னும் நிக்குறேன்!"னு சொல்ற மாதிரி நிமிர்ந்து நிக்குது.

ஹைப்பரியன் ஒரு மரம் மட்டுமல்ல, இயற்கையோட உயிர்ப்பான சின்னம்! இதோட உயரம் (ஸ்டேச்சு ஆஃப் லிபர்ட்டி) அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலைய விட பெருசு, இயற்கையோட ஆற்றலால் மட்டுமே வளர்ந்து, நூற்றாண்டுகளா வாழுது.

ரெட்வுட் மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி, காற்றை சுத்தப்படுத்துறதுல பெரிய பங்கு வகிக்குது. இந்த மரத்தை பாதுகாக்குறது, நம்ம புவியோட எதிர்காலத்தை பாதுகாக்குற மாதிரி!

இயற்கை நமக்கு ஹைப்பரியனை மட்டும் கொடுக்கல, ஒட்டுமொத்த பல்லுயிர் பெருக்கத்தையும் தந்திருக்கு. ரெட்வுட் பூங்காவுல மரங்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள் எல்லாம் ஒரு சமநிலையான சூழலை உருவாக்குது.

இந்த மரங்கள் ஆக்ஸிஜனை உற்பத்தி பண்ணி, பருவநிலை மாற்றத்தை எதிர்க்க உதவுது, X தளத்துல இயற்கை ஆர்வலர்கள் இதைப் பற்றி நிறைய விவாதிக்கிறாங்க.

இதையும் படியுங்கள்:
பூமியை காக்கும் பயணத்தில் 'பசுமை விளக்கு' வீராங்கனைகள்!
Hyperion tree

இயற்கையை மதிச்சு, இந்த ஜெயண்டை மனசுல வச்சு, அதோட அழகை எதிர்காலத்துக்கு விட்டுட்டுப் போவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com