ஸ்டைலு ஸ்டைலுதான்!

ஸ்டைலு ஸ்டைலுதான்!

ஃபேஷன் டிப்ஸ்:

ழைய குடும்ப நகைகளை டிரெண்டியான தோற்றத்தில் ரீமேக் செய்து அழகாக அணியலாம். நம் பாட்டி காலத்து நகைகள் விலைமதிப்பில்லாதவை. அதே சமயம் உணர்வுபூர்வமாக ஒரு பந்தத்தையும் ஏற்படுத்தக் கூடியவை. அவற்றை அதன் தன்மை மாறாமல் அதே சமயம் டிரெண்டியான தோற்றம் கொடுத்து, நமது இன்றைய ரசனைக்கேற்ப செய்து அணியலாம்.

கைக்கு நகங்கள் அழகு. இன்றைய இளம் பெண்களுக்கு நகங்கள் அடிக்கடி உடைந்து விழுந்து விடுவது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. இவர்கள் தங்கள் நகங்களை வலுவானதாக வைத்துக்கொள்ள மாய்ஸ்சரைஸ் செய்வது அவசியம். மேலும், நீரில் நீண்ட நேரம் கைகளைக் கொண்டு வேலை செய்வதாக இருந்தால் கையுறை அணிந்துகொண்டும், தரமான நகப்பூச்சுகளைப் பயன்படுத்தியும், நகங்களைக் கடிக்கும் பழக்கம் இருந்தால் அதனைத் தவிர்ப்பதும் நகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். ட்ரெண்டில் உள்ள நிறங்கள் மற்றும் வடிவங்களில் (மெட்டாலிக் ஷேட்ஸ், ஃப்ளோரல் டச்) போன்ற நெயில் ஆர்ட் மிகவும் ஈர்க்க வைக்கும். அவற்றைக்கொண்டு நகங்களை அழகு படுத்தலாம்.

டுத்தும் உடையிலும் கொஞ்சம் கவனம் தேவை. பருமன், குட்டை, நெட்டை, ஒல்லி என அவரவர் உடல்வாகுக்கு தகுந்த மாதிரி உடையை தேர்ந்தெடுத்து அணியும்போது அழகு கூடுதலாகத் தெரியும்.

ட்டுப் புடைவைகளுக்கு உள்ள சிறப்பு, அழகு வேறெதற்கும் கிடையாது. பிளவுஸ் புடைவை டிசைனுக்கு ஏற்றதாகவும், புடைவை சிம்பிளாக, பிளைனாக இருந்தால் பிளவுஸ் வேலைப்பாடு மிகுந்ததாகவும் , விரிந்த தோள்களை உடையவர்கள் நன்கு பரந்த கழுத்து வடிவமைப்பு உள்ள பிளவுஸ்களையும், ஓரங்களில் பைப்பிங் வைத்து அணிவதும் ரொம்ப அழகாக இருக்கும்.

மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள் நீண்ட கைகள் வைத்து பிளவுஸ் அணியலாம். பருமனான கைகளை கொண்டவர்கள் (ஸ்லீவ்லெஸ்) கையில்லாத பிளவுஸ்கள் அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு அழகிய ஹேண்ட்பேக் அவர்களின் அடையாளங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கைப்பிடிகள், தையல் இணைப்புகளைச் சோதிப்பதுடன் புதிய மாடல் பைகளை வாங்கும்போது அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.

பாரதி கூறியது போல் நிமிர்ந்த நன்னடையும் அத்துடன் நேராக நிமிர்ந்து ராஜ தோரணையில் அமர்வதும் நம் எதிரே இருப்பவர்களின் புருவங்களை உயர்த்து வதுடன், நம் அழகும், கம்பீரமும், மிடுக்கானத் தோரணையும் அவர்களிடம் நம் மதிப்பை உயர்த்தும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com