
முக அமைப்புக்கேற்ற நகைகள்
என்னதான் ஆடை அணிந்தாலும், அதற்கேற்ற நகைகள் அணிந்தால்தான் அழகாக இருக்கும். அதற்கு காதணி மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு முக அமைப்புக்கு ஏற்றார்போல் காதணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஓவல் முக வடிவம்
இவர்களுக்கு எந்தவிதமான தோடு போட்டாலும் எடுப்பாய் தெரியும். காதை ஒட்டிய சிறிய தோடும் சற்றே பெரிய தொங்கட்டானும் இவர்களுக்கு அழகாக இருக்கும்.
நீள வடிவ முகம்
இந்த முக அமைப்பு உள்ளவர்கள், ரவுண்ட் வடிவிலான வளையங்களை அணிந்தால் முகத்தைச் சற்று அகலமாக காட்டும்.
வட்ட வடிவ முகம்
இவர்கள் தொங்கட்டான் அல்லது காதை ஒட்டிய சிறிய அளவிலான கம்மல் அணிந்தால் எடுப்பாய் தெரியும்.
இதய வடிவ முகம்
இவர்களுக்கு நெற்றி பெரிதாகவும் கன்னம் ஒடிசலாகவும் இருப்பதால் சிறிய தொங்கட்டான்களை அணிந்தால் சூப்பராக இருக்கும்.
சதுர வடிவ முகம்
இவர்கள் காதை ஒட்டிய வட்ட வடிவிலான தோடுகளை அணியலாம்.
டைமண்ட் வடிவ முகம்
இந்த முக அமைப்பு ஒரு சிலருக்கே இருக்கும். இவர்கள் நீளமான தொங்கட்டான்களைஅணியலாம். அடர்த்தியான செயின்கள் தொங்கும் டிசைன்கள் இவர்களுக்கு எடுப்பாய் தெரியும்.