கேரளாவின் மிஸ் பண்ணக் கூடாத சுவையான 10 சைவ உணவுகள்!

kerala special foods!
kerala foods
Published on

ண்டிகைகளும் உணவுகளும் நம் கலாச்சாரத்துடன் இணைந்தவை. கேரள மக்களின் சுவையான சைவ உணவுகள் நாவில் நீர் சுரக்க செய்துவிடும். அவற்றில் கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாத சில சுவையான சைவ உணவுகளை பார்க்கலாம்.

1) ஓலன்: 

வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி, சிவப்பு பீன்ஸ் ஆகியவற்றுடன் பச்சை மிளகாய் கீறி போட்டு தேங்காய் பால் விட்டு வேக வைத்து தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சமைக்கும் உணவு இது.

2) இடியாப்பம்:

ஆவியில் வேகவைத்த இடியாப்பம் என்பது இங்கு காலை உணவாக உண்ணப்படும் முக்கிய உணவாகும். இதற்கு  சுவையான தேங்காய்ப்பால், கடலைக்கறி பரிமாறப்படும்.

3) புட்டு கடலைக் கறி: 

இது கேரள உணவில் முக்கிய பங்கு வகிக்கும் உணவாகும். கருப்புகொண்டைக்கடலையை ஊற வைத்து வேக விட்டு மசாலாக்கள் சேர்த்து சுவையாக சமைக்கப்படும் கடலைக்கறி புட்டு, ஆப்பம் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகிறது.

4) எரிசேரி :

வாழைக்காய், சேனைக்கிழங்கு அல்லது பூசணிக்காய், பயறுடன் சேர்த்து வேகவிட்டு தேங்காய், மிளகு, சீரகம் ஹை உள்ளஅரைத்து சேர்க்கப்படும் சுவையான எரிசேரி பண்டிகை நாட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

5) தோரன்: 

பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகளை சிறியதாக நறுக்கி தேங்காய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து சமைக்கப்படுவது தோரனாகும்.

6) அவியல்: 

காய்கறிகளின் கலவையுடன் நறுக்கிய மாங்காய்,உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிட்டு தேங்காய் பச்சை மிளகாய் அரைத்து சேர்த்து தயிர் கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் சேர்ந்த கலவை தான் அவியல்.

7) பழம் பொரி: 

நேந்திரம் பழத்தை தோல் சீவி நீளமாக நறுக்கி மைதா மாவு, மஞ்சள் பொடி, ஒரு சிமிட்டு உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரைத்த மாவில் வாழைப்பழத்தை முக்கி எண்ணெயில் பக்குவமாய் பொரித்தெடுப்பது பழம் பொரி.

இதையும் படியுங்கள்:
டேஸ்டியான மஞ்சள் பூசணி தோசை-பச்சை மிளகாய் மண்டி செய்யலாமா?
kerala special foods!

8) உன்னியப்பம்:

மிருதுவான, மிகவும் மென்மையான, பஞ்சு போன்ற அப்பம் கேரளாவின் ஸ்பெஷல். அரிசியுடன் தேங்காய், வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய் சேர்த்து அரைத்து செய்யப்படும் அப்பம் மிகவும் சுவையான சிற்றுண்டி ஆகும்.

9) அட பிரதமன்:

கேரளாவின் ஸ்பெஷல் பாயசம் இது பச்சரிசி அடைத்துண்டுகள் ரெடிமேடாக கடைகளிலும் கிடைக்கிறது, தேங்காய்ப் பால், வெல்லம், முந்திரி திராட்சை ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் பாரம்பரியமான சுவை மிக்க பாயசம்.

10) புளி இஞ்சி:

இஞ்சி, புளிக்கரைசல், உப்பு, பச்சை மிளகாய், காரப்பொடி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் சுவையான இஞ்சி கறி புளிப்பு காரம் இனிப்பு என எல்லாவித சுவையுடனும் அருமையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com