மரவள்ளிக்  கிழங்கு புட்டு
மரவள்ளிக் கிழங்கு புட்டு Image credit -youtube.com

ருசித்து மகிழ விதவிதமான 3 வகையான புட்டுகள்!

மரவள்ளிக் கிழங்கு புட்டு

மரவள்ளிக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த ஓர் உணவு ஆகும். இதில் ஒரு வித்தியாசமான முறையில் புட்டு செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு _ ½ கிலோ தேங்காய் துருவல் _ 2 கப் உப்பு _தேவைக்கு

செய்முறை :

கிழங்கை முதலில் தோல் சீவி கழுவி சுத்தம் செய்து சீவலில் வைத்து சீவி எடுக்கவும் பின்னர் சீவி வைத்த கிழங்கை ஒவ்வொரு பிடியாக கையில் எடுத்து அழுத்தி பிழிந்து சாறை எடுத்து விடவும் கிழங்கு முழுவதையும் பிழிந்து சாறை எடுத்து விட்டு கிழங்கை கை கொண்டு உதிர்த்து விடவும். பிறகு அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு புட்டு மாவு போல் விரசவும்

புட்டு குழலில் முதலில் சிறிது தேங்காய் துருவல் போட்டு பின்னர் விரசி வைத்த கிழங்கு மாவை ஒரு கை போட்டு பின் தேங்காய் அடுத்து மாவு என்று மாறி மாறி போட்டு மூடி குழலை புட்டு அவிக்கும் பாத்திரத்தில் தண்ணீர் விட்டு தண்ணீர் கொதித்ததும் அதன் மேல் வைத்து ஆவியில் வேக வைக்கவும். மேலே ஆவி 10 நிமிடம் வரவேண்டும். வெந்ததும் இறக்கி புட்டை தட்டி எடுத்து சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

கோதுமை மாவு புட்டு

கோதுமை மாவு புட்டு
கோதுமை மாவு புட்டுImage credit -youtube.com

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 2 _கப், தேங்காய் துருவல்_11/2 கப் ஏலக்காய் தூள்_1ஸ்பூன் வெல்ல பொடி_1/4 கப்

செய்முறை:

கோதுமை மாவை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் தட்டி மூட்டை கட்டி இட்லி பாத்திரத்தில் தட்டின் மேல் மூட்டையை வைத்து 20 நிமிடம் வேக விடவும். வெந்ததும் இதை ஒரு அகலமான பாத்திரத்தில் தட்டி கரண்டியால் உதிர்த்து விட்டு கட்டி இல்லாமல் ஆற விடவும். இனி இந்த மாவில் தேவைக்கு உப்பு போட்டு பச்சை தண்ணீர் விட்டு புட்டுக்கு விரவுவது போல விரவி இத்துடன் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், வெல்ல பொடி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இட்லி தட்டுகளில் துணி விரித்து ஒவ்வொரு குழியிலும் மாவை வைத்து இட்லி அவிப்பது போல் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 10 நிமிடம் கழித்து கரண்டியால் எடுத்து பரிமாறவும். சூடாக சுவையாக,ஆரோக்கியமாக இருக்கும்.

இனிப்பு காய்கறி புட்டு

இனிப்பு காய்கறி புட்டு
இனிப்பு காய்கறி புட்டுImage credit -youtube.com

தேவையான பொருட்கள்:

காரட் துருவல் _1 கப் தேங்காய் துருவல்_1 கப் பீட்ரூட் துருவல் _1 கப் பாசி பருப்பு _1 கப் வெல்லத்தூள் _1 கப் ஏலக்காய் தூள்_1/2 ஸ்பூன் நெய் _2 ஸ்பூன் முந்திரி பருப்பு, திராட்சை தேவைக்கு

செய்முறை:

முதலில் பாசி பருப்பை பொன்னிறமாக வறுத்து ½ மணி நேரம் தண்ணீரில் ஊற விடவும். ஊறிய பருப்பை சல்லடை யில் வடிகட்டி மிக்ஸி ஜாரில் போட்டு ரவை போல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவுடன் காரட், பீட்ரூட் துருவல் ஆகியவற்றை சேர்த்து குக்கரில் வேகவிடவும். வெந்த பின்பு அகன்ற பாத்திரத்தில் போட்டு கட்டி இல்லாமல் உதிர்த்து வைத்து கொள்ளவும். அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள், வெல்லம் பொடி, சேர்த்து கலக்கவும். பின் முந்திரி பருப்பு, திராட்சையை, நெய்யில் வறுத்து கொட்டி கரண்டியால் கிண்டி விடவும். இதுவே இனிப்பு காய்கறி புட்டு ஆகும். சாப்பிட சுவையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

logo
Kalki Online
kalkionline.com