3 சுவையான பாயாசம் வகைகள்!

பாயாசம்...
பாயாசம்...

பாயாசம் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. விருந்தினர் வந்தால் வித்தியாசமான பாயாசம் செய்து அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

1.   பலகலப்பு பாயாசம்:

பலகலப்பு பாயாசம்...
பலகலப்பு பாயாசம்...

தேவையான பொருட்கள்:

·         வறுத்த சன்ன ரவா_1 கப்

·         பால்_2 கப்

·         சர்க்கரை_1 கப்

·         கெட்டியான நெய்_4 ஸ்பூன்

·         பாதாம் பருப்பு_5

·         முந்திரி பருப்பு_5

·         பிஸ்தா_5

·         கற்கண்டு தூள்_2 ஸ்பூன்

·         திராட்சை_10

·         ஏலக்காய்_4

·         லவங்கம்_5

·         தேங்காய்_1மூடி

·         பொடி உப்பு_1சிட்டிகை

செய்முறை:

ரவையில் சிறிது தண்ணீர் கலந்து உதிரியாக்கி ஒரு சிட்டிகை பொடி உப்பு சேர்த்து, நெய தடவி பதமாக இடித்து வைத்து கொள்ளவும் பாதாம் பிஸ்தா இரண்டையும் தண்ணீரில் போட்டு தோலை அகற்றவும். ஏலக்காயை தூள் செய்து கொள்ளலாம்.

பாதாம், பிஸ்தா, முந்திரி, திராட்சை முதலியவற்றை தனி தனியாக வறுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். இவற்றை இடித்து வைத்த ரவையுடன் சேர்த்து  சிறு உருண்டைகளாக உருட்டி  கற்கண்டு தூளில் விரவி எடுக்கவும் பாலை வற்ற காய்ச்சவும்.

ஒரு குழிவான வாணலியில் நெய் விட்டு உருண்டைகளை போட்டு உடையாமல் கிளறி எடுக்கவும். அதே வாணலியில் அரை கப் பால் தண்ணீர் இரண்டையும் கலந்து நிதானமாக எரிய கூடிய அடுப்பில் வைத்து கொதிக்கும் போது உருண்டைகளை போட்டு அடி பிடிக்காமல் கிளறவும். உருண்டைகளை வெந்ததும் மேலே மிதக்கும். அப்போது பால், சர்க்கரை, இரண்டையும் சேர்த்து சற்று கெட்டியான பக்குவத்தில் தீயை அணைக்கவும். பிறகு தேங்காய் துருவலை அரைத்து கெட்டியான பால் எடுத்து வடிகட்டி பாயாசத்தில் சேர்த்து உபயோகப்படுத்தவும்.விரும்பினால் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து கொள்ளலாம்.

2.   அரிசி கடலைப் பருப்பு பாயாசம்:

அரிசி கடலைப் பருப்பு பாயாசம்...
அரிசி கடலைப் பருப்பு பாயாசம்...

தேவையானப்பொருட்கள்:

·         அரிசி_3/4 கப்

·         கடலைப்பருப்பு_3/4 கப்

·          தேங்காய் _1 மூடி

·         பால்_1கப்

·         ஏலக்காய்_3

·         முந்திரி பருப்பு_15

·         கிஸ்மிஸ் _10

·         வெல்லம்_1/2 கிலோ

·         நெய் _1 ஸ்பூன்

செய்முறை:

அரிசி, கடலைப் பருப்பு இரண்டையும் தனி தனியாக வறுத்து எடுத்துக் கொண்டு ஆறிய பிறகு அதை கழுவி ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி வேகவைக்கவும். நன்கு குழைந்து வெந்ததும் தேங்காயை துருவி போட்டு ஏலக்காய் பொடி செய்து போடவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி ஊற்ற வேண்டும். பிறகு முந்திரி, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்து போட்டு பிறகு காய்ச்சிய பாலை ஊற்றி கை விடாமல் கிண்டி இறக்கவும்.

3) அவல் பாயாசம்:

அவல் பாயாசம்...
அவல் பாயாசம்...

தேவையான பொருட்கள்:

·         நெய்_ 2 ஸ்பூன்

·         முந்திரி பருப்பு_10

·         ஏலக்காய் _ 3

·         பொடியாக நறுக்கிய பாதாம்  _  2ஸ்பூன்

·         பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்_1/4 கப்

·         கெட்டியான அவல்_ 1கப்

·         பொடித்த வெல்லம் _1_கப்

·         காய்ச்சி ஆற வைத்த பால் _2கப்

·         தண்ணீர்_1 கப்            

செய்முறை:

ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி, பாதாம் இரண்டையும் பொன்னிறமாக வறுத்து ஓரளவு வறுபட்டதும் தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் சிறு தீயில் அவலை சேர்த்து வறுக்கவும். அவலை வறுத்ததும் அதில் பாலையும், தண்ணீரையும்   சேர்த்து கொதிக்கும் போது ஏலக்காய்த் தூள் போடவும்.

அவல் குழைந்து போகாமல் சரியாக வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, வெல்லத்தை நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி அத்துடன் சேர்த்து கொள்ளவும். கரண்டியால் நன்கு கலக்கி விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பிறகு வறுத்த  முந்திரி, பாதாம், தேங்காய் துண்டுகளை சேர்த்து இறுதியில் 2ஸ்பூன் நெய் விட்டு இறக்கி பரிமாறவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com