வெள்ளை சோளம் வைத்து 3 வகையான உணவுகள்!

வெள்ளை சோளம்...
வெள்ளை சோளம்...Image credit - youtube.com
Published on

முதலில் 3 க்கும் சேர்த்து 21/2 கப் சோளத்தை 9மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்து விட்டு வைக்கவும்.

வெள்ளை சோளக்கஞ்சி

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த சோளம் _1/2 கப்

பாசிப்பருப்பு _1/2 கப்

பூண்டு _4 பல்

சீரகம் _1/2 ஸ்பூன்

மஞ்சள்தூள் _1/4 ஸ்பூன்

தேங்காய் துருவல் _1 கப்

நெய் _1 ஸ்பூன்

நறுக்கிய காரட் துண்டுகள் _1/4 கப்

செய்முறை:

நன்கு கழுவிய பாசிப் பருப்பு, ஊறவைத்த வெள்ளை சோளம் இரண்டையும் குக்கரில் எடுத்து அத்துடன் பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், 4 கப் தண்ணீர் சேர்த்து 6 விசில் வரும் வரை நன்கு வேகவிட்டு இறக்கவும்.

பின்னர் தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பால் எடுக்கவும். பிறகு ஒரு வாணலியை எடுத்து நெய் ஊற்றி காரட் துண்டுகளை வதக்கி தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பிறகு இத்துடன் வேகவைத்து எடுத்த சோளக்கலவையை சேர்த்து நன்கு கலக்கி பின்னர் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். சிறிது மிளகு தூள் தூவி வாய்க்கு ருசியான வெள்ளை சோள கஞ்சியை பரிமாறலாம்.

வெள்ளை சோள உப்புமா

தேவையான பொருட்கள்:

எண்ணெய் _1 ஸ்பூன்

கடுகு _1/2 ஸ்பூன்

கடலைப்பருப்பு_1/2 ஸ்பூன்

மிளகாய் _2

பெரிய வெங்காயம் _1

பெருங்காயத்தூள்_ 1/2 ஸ்பூன்

துருவின தேங்காய் _3 ஸ்பூன்

உப்பு _தேவைக்கு

லெமன் ஜூஸ் _2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு குக்கரில் ஊறவைத்த சோளம் 1 கப் எடுத்து 3 கப் தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேகவைக்கவும். சோளம் குழையாமல் மலர்ந்து வெந்து இருக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி பெருங்காயத்தூள் சேர்த்து கிண்டி விட்டு வேகவைத்து எடுத்த வெள்ளை சோளத்தை சேர்த்து உப்பு போட்டு தேங்காய் துருவல் சேர்த்து ஒன்றாக கலந்து கிண்டி இறுதியில் லெமன் ஜூஸ் விட்டு கிளறி இறக்கவும். மிகவும் அருமையான சோள உப்புமா ரெடி.

சோள சாம்பார் சாதம்
சோள சாம்பார் சாதம்Image credit - youtube.com

வெள்ளை சோள சாம்பார் சாதம்

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த வெள்ளை சோளம் _1கப்

துவரம் பருப்பு _1/4 கப்

மஞ்சள்தூள் _1/2 ஸ்பூன்

சீரகத்தூள் _1/2 ஸ்பூன்

பூண்டு _1 பல்

தக்காளி _2

சின்ன வெங்காயம் _10

எண்ணெய் _1 ஸ்பூன்

காரட் _1, பீன்ஸ் _5

சாம்பார் பொடி _1 ஸ்பூன்

நறுக்கிய பசலி கீரை _2 கப்

செய்முறை:

ஒரு குக்கரை எடுத்து அதில் ஊற வைத்த வெள்ளை சோளம், கழுவி சுத்தம் செய்த துவரம்பருப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், பூண்டு, தக்காளி, சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேகவிடவும். நன்கு குழைந்து வெந்ததும் மசித்து வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
ஷீரடி சாயி பாபாவின் அமுத மொழிகள்!
வெள்ளை சோளம்...

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி இத்துடன் பொடியாக நறுக்கிய காரட், பீன்ஸ், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இத்துடன் சாம்பார் பொடி சேர்த்து பின்னர் மசித்து வைத்த சோளக் கலவையை சேர்த்து உப்பு சரி பார்த்து 2 நிமிடம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் பசலி கீரையை சேர்த்து கிளறி இறக்கவும்.

ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சாம்பாரில் ஊற்றி இறக்கவும்.

குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து விட்டால் மீதி இல்லாமல் சாப்பிட்டு காலி பண்ணுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com