இந்த 4 வகையான Detox Water போதும் உங்கள் உடலைச் சுத்திகரிக்க!

Detox Water
Detox Water
Published on

Detox Water என்பது உடலில் உள்ள கெட்ட விஷயங்களை நீக்கி புத்துணர்ச்சியூட்டும் ஒரு பிரபலமான பானமாகும். இதை ஓர் வழக்கமான பானமாக நாம் சேர்த்துக் கொள்வதன் மூலமாக, உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்க உதவும். சரி வாருங்கள், இந்தப் பதிவில் மொத்தம் 4 வகையான Detox Water எப்படிச் செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம்.

1. Lemon and mint Detox water: இதைச் செய்வதற்கு ஒரு எலுமிச்சம் பழச்சாறு, சிறிதளவு புதினா மற்றும் 4 கப் தண்ணீர் போதும். இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து காலையில் எடுத்து குடித்தால், உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இதைக் குடிப்பதால் கல்லீரல் சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் வயிற்று புண்களை ஆற்றவும், அஜீரணத்தைப் போக்கவும், உடலுக்குக் குளிர்ச்சியளிக்கவும் உதவுகிறது.

2. Cucumber and Ginger Detox water: ஒரு வெள்ளரிக்காய், சிறிய துண்டு இஞ்சி மற்றும் நான்கு கப் தண்ணீர் இருந்தால் போதும், இந்த அற்புதமான வெள்ளரிக்காய் இஞ்சி Detox பானத்தைத் தயாரித்துவிடலாம். வெள்ளரிக்காய் மற்றும் இஞ்சிபைப் பொடியாக நறுக்கி, தண்ணீரில் போட்டு கலக்கி, ஃப்ரிட்ஜில் சில மணி நேரம் வைத்து குடித்தால், கோடை காலத்திற்கு ஏற்ற பானமாக இது அமையும்.

3. Watermelon and Basil Detox water: இந்த Detox Water கோடை காலத்தில் அனைவரும் முயற்சிக்க வேண்டிய ஒன்றாகும். இதைத் தயாரிப்பதற்கு 2 கப் தர்பூசணிப் பழம் மற்றும் ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை 4 கப் தண்ணீரில் சேர்த்து கலக்கி, ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக எடுத்து குடித்தால், வெயிலுக்கு இதமாக சூப்பர் சுவையில் இருக்கும். இதைக் குடிப்பது மூலமாக சருமம் மேம்படுகிறது மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையை மாற்றும்  Dopamine Detox பயிற்சி!
Detox Water

4. Amla and cinnamon Detox water: இதைத் தயாரிக்க இரண்டு நெல்லிக்காய் மற்றும் ஒரு இலவங்கப்பட்டையை பொடியாக நறுக்கி, 4 கப் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். இந்த அற்புத பானத்தின் நெல்லிக்காய் மற்றும் லவங்கப்பட்டையின் தத்துவமான கலவை, ஒரு புதுவிதமான சுவையைக் கொடுத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இதைக் குடிப்பது மூலமாக நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகும், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும் மற்றும் உடலைச் சுத்திகரித்து ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கும்.

கிட்டத்தட்ட மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பானங்களின் தயாரிப்பு முறையும் ஒரே மாதிரிதான். ஆனால் ஒவ்வொரு பானமும் ஒவ்வொரு விதத்தில் நமக்கு நன்மை புரிகிறது. எனவே இந்த கோடைகாலத்திற்கு இவை அனைத்தையும் முயற்சி செய்யுங்கள். அதே நேரம் இவற்றை எல்லா காலங்களிலும் குடிக்கலாம் என்பதால், உடலை நோயின்றி ஆரோக்கியமாகப் பராமரிக்க, Detox பானத்தை தினசரி எடுத்துக் கொள்ள முயலுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com