வேஃபர் பால்ஸ்
தேவை: 1 பாக்கெட் பிஸ்கெட், 2 தேக்கரண்டி கன்டென்ஸ்டு மில்க், 1 தேக்கரண்டி கோகோ பவுடர், 2 – 3 தேக்கரண்டி தேங்காய்த் துருவல், 2 தேக்கரண்டி க்ரீம்.
செய்முறை: மிக்ஸியில் தேங்காய்த் துருவல் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் பிளெண்ட் செய்து, இதை 1 -2 நிமிடம் வரை ஒருநான்ஸ்டிக் பேனில், மிதமான தீயில் வறுத்து, சிறு சிறு உருண்டைகளாக்கி தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்து சர்வ் செய்யவும்.
சீஸி ஜுகினி காயின்
தேவை: 2 தேக்கரண்டி துருவிய சீஸ், ½ கப் மைதா, ½ கப் ஓட்ஸ் மாவு, ½ வெங்காயம் (பொடியாக நறுக்கியது), ½ குடை மிளகாய் (பொடியாக நறுக்கியது), 1 ஸ்பூன் மிளகுத் தூள், 1 ஜுகினி ஸ்லைஸ், எண்ணெய், உப்பு.
செய்முறை: ஓட்ஸ் மாவு, மைதா, உப்பு, சீஸ் இவைகளைக் கரைசலாக்கி காய்கறிகள் சீஸை சேர்த்துக் கலக்கி, இதில் ஜுகினி ஸ்லைஸ்களைத் தோய்த்தெடுத்து, டீப் ஃப்ரை செய்யவும். சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.
சாக்கோ க்ரீம் பனானா கஷி
தேவை: 1 தேக்கரண்டி கோகோ புவடர், 2 தேக்கரண்டி க்ரீம், 3 தேக்கரண்டி கன்டென்ஸ்டு மில்க், 8 – 10 ரோஸ்ட் பாதாம், 1 ரெடிமேட் டார்டிலா, 1 வாழைப்பழம்.
செய்முறை: ஒரு வாணலியில் கண்டென்ஸ்டு மில்க், கோகோ பவுடர், க்ரீம் சேர்த்து 1 – 2 நிமிடம் சுடவைத்து, சாஸ் ஆக்கி டார்ட்டிலா மீது பூசி நடுவில் வாழைப்பழத்தை வைத்து ரோல் செய்து, துண்டுகளாக்கி பாதாம் வைக்கவும்.
க்ரிஸ்பி ஆலுபால்ஸ்
தேவை: 2 வேக வைத்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம் 1, 1 பச்சை மிளகாய், கோத்துமல்லி பொடியாக நறுக்கியது; 1 தேக்கரண்டி மைதா (கரைத்தது), 2 – 3 தேக்கரண்டி அவல் (லேசாகப் பொடித்தது), உப்பு, எண்ணெய்.
செய்முறை: உருளைக்கிழங்கை மசித்து, உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி சேர்த்து, சிறு சிறு உருண்டைகளாக்கி, மைதா மாவு கரைசலில் தோய்த்தெடுத்து, அவலில் புரட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து, சட்னியுடன் சர்வ் செய்யவும்.
ப்ரெட் பேடா பவுச்
தேவை: 4 – 5 ப்ரெட், 5 – 6 பேடா, 1- 2 தேக்கரண்டி பாதாம், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் (பொடியாக நறுக்கியது), 1 – 2 தேக்கரண்டி வெண்ணெய், சிறிது சாக்லேட் சாஸ்.
செய்முறை: ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி, சப்பாத்தி போல் திரட்டி, பேடாக்களை உதிர்த்து அதில் நட்ஸ் கலந்து, ப்ரெட்டின் நடுவில் வைத்து, தண்ணீர் தடவி பவுச் ஆக்கி, பொன்னிறமாக வறுத்தெடுத்து சாக்லேட் சாஸுடன் பரிமாறவும்.
கார்ன் ஃப்ளேக்ஸ் களஸ்டர்ஸ்:
தேவை: 1 கப் கார்ன்ஃப்ளேக்ஸ், ¾ கப் வெல்லம், 2 தேக்கரண்டி பாதாம் வறுத்தது, 2 தேக்கரண்டி கிஸ்மிஸ், 1 தேக்கரண்டி க்ரீஷ்.
செய்முறை: வெல்லப் பாகு செய்து, இதில் 1 தேக்கரண்டி க்ரீம் கலக்கவும். கார்ன் ஃப்ளேக்ஸ், பாதாம் மற்றும் கிஸ்மிஸ் சேர்த்து, நெய் தடவிய பாத்திரத்தில் ஸ்பூனால் கிளஸ்டர்ஸ் செய்து சர்வ் செய்யவும்.
ஃப்ரூட் அண்டு நட்ஸ் ஐஸ்க்ரீம் கோன்:
தேவை: 3-4 ஐஸ்க்ரீம் கோன், 1 கப் நறுக்கிய பழங்கள், 2 -3 தேக்கரண்டி உலர் பழ வகை (முந்திரி, திராட்சை, அக்ரூட், பாதாம்) பொடியாக நறுக்கியது. 4 – 5 தேக்கரண்டி ஹங்கர்டு; 1 -2 தேக்கரண்டி சர்க்கரை (பொடித்தது).
செய்முறை: பழங்கள், தயிர், சர்க்கரை ஆகியவற்றைக் கலக்கி இதைக் கோன்களில் நிரப்பி, மேலே நட்ஸ் கொண்டு அலங்கரித்து சர்வ் செய்யவும்.