இந்தியாவின் 8 மாநிலங்களின் 8 சுவைமிகுந்த ஊறுகாய்!

Pickle
Pickle

அனைத்து வகையான சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளக் கூடிய ஒரே சைட் டிஷ் ஊறுகாய் தான். பொதுவாக எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் ஊறுகாய் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அந்தவகையில் இந்தியாவின் மிகச்சுவையான 8 ஊறுகாய்கள் என்னவென்பதைப் பார்ப்போம்.

1. கருவேப்பிலை ஊறுகாய்:

Karuveppilai pickle
Karuveppilai pickle

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் சுவை மிகுந்த இந்த ஊறுகாயை கருவேப்பிலை பயன்படுத்திச் செய்வார்கள். இதனை ஒருமுறை செய்துவைத்துக்கொண்டு 10 நாளைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். எண்ணெய் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது.

2. Bhut Jolokia ஊறுகாய்:

Bhut Jolokia ஊறுகாய்
Bhut Jolokia ஊறுகாய்

இந்த ஊறுகாய் அசாமில் காலம் காலமாக செய்துவரும் ஒன்று. மிகவும் காரமான ஊறுகாயைச் சாப்பிட ஆசைப்படுபவர்கள் இந்த ஊறுகாயைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் இது மிளகாயின் அரசன் என்றழைக்கப்படும் அசாமீஸ் மிளகாய் பயன்படுத்திச் செய்யப்படும் ஊறுகாயாகும்.

3. Monj achaar Pickle:

Monj achaar Pickle
Monj achaar Pickle

நூல்கோல் என்றழைக்கப்படும் Kohlrbri என்ற காய்கறியால் இந்த மோஞ்ச் அச்சார் ஊறுகாய் செய்யப்படும். இது காஷ்மீரில்தான் சுவையாகவும் ஒரிஜினலாகவும் கிடைக்கும். ஆன்லைனில் கிடைக்கும் என்பதால் அந்த ஊறுகாயை நீங்கள் வாங்கிச் சுவைத்துப் பார்க்கலாம்.

4. Akhuni Pickle:

Akhuni Pickle
Akhuni Pickle

சோயா பீன்ஸ் பயன்படுத்திச் செய்யப்படும் இந்த ஊறுகாய் நாகலாந்தில் புகழ்பெற்ற ஊறுகாயாகும். சோயா பீன்ஸைப் புளிக்கவைத்துத் தயார் செய்து இந்த ஊறுகாயைச் செய்வார்கள்.

5. Orange Tholi Achaar:

Orange Tholi Achaar
Orange Tholi Achaar

கேரளாவின் பாரம்பரிய ஊறுகாயான இது ஆரஞ்சு பழத்தின் தோலைப் பயன்படுத்தி செய்யப்படும் ஊறுகாய். எப்போதும் நாம் ஆரஞ்சுப் பழத்தின் தோலைத் தூக்கியே எறிவோம். அதற்கு பதிலாக நாம் அதை வைத்துச் சுவையான ஊறுகாயைச் செய்யலாம்.

6. Mesu Pickle:

Mesu Pickle
Mesu Pickle

புளித்த மூங்கில் தண்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த மிசு ஊறுகாய், சிக்கீமில் பிரபலமானது. காய்கறிகளின் எண்ணெய்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் பயன்படுத்திச் செய்யப்படும் இந்த ஊறுகாய் சிக்கீமின் முக்கால்வாசி உணவுகளுக்குத் தொட்டு சாப்பிடும் ஒன்றாக உள்ளது.

7. Chalta’s achaar ஊறுகாய்:

Chalta’s achaar
Chalta’s achaar

மேற்கு வங்கத்தில் யானை ஆப்பிள் மூலம் செய்யப்படுகிறது இந்த ஊறுகாய். Chalta என்றால் யானை ஆப்பிள் என்றுப் பொருள். இதனை நீங்கள் யானை ஆப்பிள் கிடைத்தால் செய்து சாப்பிடலாம் அல்லது ஆன்லைனிலும் வாங்கிக்கொள்ளலாம்.

8. Lingdu ka achaar:

Lingdu ka achaar
Lingdu ka achaar

ஃபீடில் ஹெட் ஃபேர்ன் என்றக் காயால் ஹிமாச்சல பிரதேசத்தில் செய்யப்படும் ஊறுகாய். இதில் சில கலவைக் காய்களையும் பயன்படுத்துவர். ஹிமாச்சல் மற்றும் சுற்றி உள்ள சில இடங்களில் மட்டுமே செய்யப்படும் இந்த ஊறுகாய் தனிச்சுவையைக் கொண்டிருக்கும்.

இந்த அனைத்து ஊறுகாயையும் உங்களால் வீட்டில் செய்ய முடியாது. அந்த ஊறுகாய்களை நீங்கள் ஆன்லைனில் வாங்கிச் சுவைத்துப் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com