இதமான வானிலைக்கு ஏற்ற சுவையான ஒயிட் சால்னா!

ஒயிட் சால்னா, பரோட்டா
ஒயிட் சால்னா, பரோட்டாsandhiyascookbook.com
Published on

ரோட்டாவுக்கு சால்னாதான் பெஸ்ட். சூப்பர் டேஸ்ட்டும்
கூட . 2 பரோட்டா உள்ளே போகும். பல பேரின் கருத்து இது. இதை சற்று மாற்றி செய்யலாமே என்று யோசித்து செய்த ரெஸிபி இது.

இனி சூடான இட்லி மற்றும் கல்தோசைக்கும் பெஸ்ட் இந்த 'வைட் சால்னா' தாங்க.

வைட் சால்னா

தேவையானவை:

உருளைக்கிழங்கு – 1, கேரட் – 1, பெரிய வெங்காயம் – 2, சின்ன வெங்காயம் – 10, காலிஃப்ளவர் - சிறு துண்டு, பீன்ஸ்  - 10, பூண்டு – 10 பல், பச்சை மிளகாய் – 3, இஞ்சி - சிறு துண்டு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், பாசிப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், தேங்காய் - ½ முடி, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க: சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு

செய்முறை:

காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி அரைத்து…, இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியாக வைக்கவும். பாசிப்பருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

பொட்டுக்கடலை + பச்சை மிளகாயை நன்கு அரைத்துக். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இரண்டாவதாக எடுத்த தேங்காய்பாலைச் சேர்க்கவும்.

நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

காய்கறிகள் வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பு+அரைத்த பொட்டுக்கடலை விழுது சேர்த்து (தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம்) கொதிக்கவிடவும்.

இதையும் படியுங்கள்:
யார் அந்த இரு மாதர்?
ஒயிட் சால்னா, பரோட்டா

அதனுடன் முதல் தேங்காய்ப்பாலை சேர்த்து நன்றாகக் கொதித்து, நுரைத்து வந்ததும் இறக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.

வாணலியில் சிறிதளவு நெய்/எண்ணெய் விட்டு சீரகம் + கறிவேப்பிலை + மல்லித்தழை தாளித்து அதில் கொட்டிகலக்க....

கலக்கலான 'வைட் சால்னா' கம கம மணத்துடன் உங்களைப் பார்த்து சிரிக்கும்.

அருமையான சுவையில் அசத்தும் இந்த வைட் சால்னா... 

எங்க கிளம்பிட்டீங்க சமையல் அறைக்கா? சென்னையின் இதமான வானிலையை இந்த ஒயிட் சால்னா செய்து  கொண்டாடுவோம்.

பி.கு... பரோட்டாவையும் வீட்டிலேயே பண்ணுங்கள் ஆரோக்கியமாக.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com