உடனடி ஆற்றலைக் கொடுக்கும் அற்புத பானம்!

A miracle drink that gives instant energy.
A miracle drink that gives instant energy.

ன்றாக சாப்பிட்டும் உங்களுக்கு உடல் சோர்வாக உள்ளதா? அப்படியானால் உடலுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்கும் இந்த அற்புத பானத்தை செய்து குடித்துப்பாருங்கள். சூப்பர் மேன் போல எனர்ஜி கிடைக்கும். பழங்கள் மற்றும் டிரை ஃப்ரூட் சேர்த்து செய்யப்படும் இந்த ஜூசைக் குடித்தால், உடலுக்கு புத்துணர்ச்சியும் ஆற்றலும் கிடைக்கும். 

இந்த ஜூஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்: 

  • பேரிச்சம்பழம் - 5

  •  உலர்ந்த அத்தி  - 4

  •  பாதாம் பருப்பு - 5

  •  வால்நட் - 2

  •  முந்திரிப்பருப்பு - 5

  •  பால் - 1 கப்

  •  திராட்சை - 10

  •  மாதுளை - 1 கப்

  •  ஊற வைத்த சப்ஜா விதை - 1 கப்

  • சர்க்கரை - தேவையான அளவு. 

செய்முறை: 

முதலில் ஒரு கப்பில், முந்திரி, பாதாம், வால்நட்ஸ், அத்தி, பேரிச்சம்பழம் அனைத்தையும் சூடான பாலில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 

பின்னர் தனியாக ஒரு கிண்ணத்தில் சப்ஜா விதைகளை ஊறவைக்கவும்.

ஊற வைத்த டிரை ஃப்ரூட்ஸ் மற்றும் பாலை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் கஸ்டட் பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். இதில் அரைத்து வைத்த டிரை ஃப்ரூட்ஸ் கலவையை சேர்த்து, நன்றாகக் கலந்துவிட்டு, கொஞ்சம் ஏலக்காய் பொடி தூவி, மெல்லிய தீயில் நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும். 

இறுதியில் அதில் மாதுளை, திராட்சை போன்ற உங்களுக்குப் பிடித்த பழங்களை சேர்த்து, பின்னர் சப்ஜா விதையையும் கலந்தால் உடனடி எனர்ஜி ட்ரிங்க் தயார். 

இந்த பானம் பருகுவதற்கு நல்ல சுவையிலும், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையிலும் இருக்கும். இந்த பானத்தை வாரம் இருமுறை குழந்தைகளுக்குக் கொடுத்து வருவது நல்லது. உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் இதைக் கொடுக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com