பாலில் அதிகமான கால்சியம் இருப்பதால் எலும்புக்கும், பற்களுக்கும் வலிமை தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிக்கும். சருமத்திற்கும், முடிக்கும் மிகவும் நல்லது. சருமத்தை பளபளப்பாக்கும். நம் வீட்டில் தினமும் பயன்படுத்தும் இத்தகைய நன்மைகள் உடைய பாலை வைத்து இன்னைக்கு சில ரெசிபிக்கள் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.
மசாலா மில்க்:
தேவையான பொருட்கள்:
முந்திரி-10
பாதாம்-5
பிஸ்தா-5
கிராம்பு-3
பால்-2 கப்.
சக்கரை-2 தேக்கரண்டி.
ஏலக்காய்-1/4 தேக்கரண்டி.
குங்குமப்பூ- சிறிதளவு.
செய்முறை விளக்கம்:
முதலில் மிக்ஸியில் முந்திரி 10, பாதாம் 5, பிஸ்தா 5, கிராம்பு 3 சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் பால் 2 கப் ஊற்றி நன்றாக சுண்ட காய்ச்சவும். அதில் நிறத்திற்காக குங்குமப்பூ சிறிது சேர்க்கவும். ஏலக்காய் ¼ தேக்கரண்டி, சக்கரை 2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விட்டு அதில் பொடி செய்து வைத்திருந்த முந்திரி, பிஸ்தாவை சேர்த்து கலக்கவும். இப்போது பாலை பொங்க விட்டு இறக்கவும். இதை அப்படியே ஒரு கண்ணாடி கிளாசில் மாற்றி மேலே சிறிது குங்குமப்பூ அழகுக்காக சேர்த்து பரிமாறவும். இதை பிரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம். இந்த ரெசிபியை நீங்களும் உங்க வீட்டில் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.
டேஸ்டியான மில்க் கீர் வீட்டிலேயே செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்;
நெய்-1 தேக்கரண்டி.
பால்-1 லிட்டர்.
பாதாம்-5
பிஸ்தா-5
முந்திரி-5
ஏலக்காய் தூள்-1/4 தேக்கரண்டி.
அரிசி-1/4 கப்.
சக்கரை-1/2கப்.
குங்குமப்பூ- சிறிதளவு.
செய்முறை விளக்கம்.
முதலில் அடுப்பில் ஃபேனை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். இப்போது ஃபேனில் மிச்சமிருக்கும் நெய்யில் பால் 1 லிட்டரை ஊற்றிக்கொள்ளவும் அத்துடன் நிறத்துக்காக குங்குமப்பூ சிறிதளவு, ஏலக்காய் ¼ தேக்கரண்டி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அத்துடன் ஊறவைத்த அரிசி 1/4கப் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அரிசி நன்றாக வெந்ததும் ½ கப் சர்க்கரை சேர்த்து கிளறிவிடவும். அத்துடன் கடைசியாக வறுத்து வைத்த முந்திரி, பாதாமை சேர்த்து கின்டி இறக்கவும். இப்போது டேஸ்டியான மில்க் கீர் தயார். இதை ஒரு கண்ணாடி கிளாசில் ஊற்றி மேலே பொடியாக வெட்டிய முந்திரி, பாதாமை அழகுக்கு தூவி பரிமாறவும். பிரிட்ஜில் வைத்து குளுகுளுவென்றும் பரிமாறலாம். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க.