
டின்னருக்கு இட்லி, தோசைக்கு என்ன சைட் டிஷ் செய்வது எனத் தெரியவில்லையா? அப்படியானால் முட்டைகோஸ், துவரம் பருப்பு, பச்சை பயிறு வைத்து செய்யும் இந்த டிஷ் செய்து பாருங்கள். எல்லாவிதமான உணவுகளுக்கும் இது நல்ல காம்பினேஷனாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 2 கப் நறுக்கியது
பாசிப்பருப்பு - ½ கப்
துவரம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
புளி - சிறிதளவு.
மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
பூண்டு - 5
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, முட்டைகோஸ், சாம்பார் பொடி, பூண்டு, தக்காளி, புளி கரைசல் பச்சை மிளகாய் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து போதிய அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.
ஐந்து விசில் விட்டால் போதும் அனைத்துமே நன்றாக வெந்துவிடும். இவை அனைத்தும் நன்றாக வெந்ததும் கூடுதலாக தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பின்னர் தனியாக ஒரு கடாயில், எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் பெருங்காயத்தூள், கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வதக்கி குக்கரில் சேர்த்து தாளித்தால் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த டின்னர் டிஷ் தயார்.
இதை சாதத்துடனும் சாப்பிடலாம். அல்லது பூரி பொங்கல் இட்லி தோசை சப்பாத்தி போன்ற அனைத்துக்குமே தொட்டுக்கொள்ள பயன்படுத்தலாம். உண்மையிலேயே இதன் சுவை சூப்பராக இருக்கும்.