பலவித நோய்களுக்கு மருந்தாக ஆவாரம் பூ சூப்!

ஆவாரம் பூ சூப்
ஆவாரம் பூ சூப்Image credit - pixabay.com
Published on

ஆவாரம் பூ சூப்!

வாரம் பூ ஒரு கப் 

சின்ன வெங்காயம் 10 

பயத்தம் பருப்பு கால் கப் 

மஞ்சள் தூள் அரை ஸ்பூன் 

புதினா ஒரு கொத்து 

இஞ்சி துருவல் ஒரு ஸ்பூன் 

நல்லெண்ணெய் சிறிது 

உப்பு 

மிளகு சீரகத்தூள் தலா ஒரு ஸ்பூன்

வெண்ணெய் 1/2 ஸ்பூன்

தங்க பஸ்பத்திற்கு இணையான ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும். நிறைய மருத்துவ குணம் நிறைந்த இந்த ஆவாரம் பூ சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவும். இது ஒரு சிறந்த ஆன்ட்டிபயாட்டிக்.

பயத்தம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி புதினா இலைகளை சேர்த்து தேவையான நீர் விட்டு குழைய வேக விடவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அத்துடன் தேவையான உப்பு,  இஞ்சி துருவல், ஆவாரம் பூ போட்டு வதக்கி, மசித்த பயத்தம் பருப்பு, பொடித்த மிளகுத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து இரண்டு கப் நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். கடைசியாக அரை ஸ்பூன் வெண்ணெய் போட மணமும் சுவையும் நிறைந்த சூப் தயார்.

சூடாக அருந்த தொண்டைக்கு இதமாகவும் பல நோய்களுக்கு மருந்தாகவும் அமையும் இந்த ஆவாரம்பூ சூப்.

நாளை கிடைக்கப் போகும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் கலாக்காய் சிறந்தது என்பது முதுமொழி.

எப்ப பாரு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, வெங்காய சட்னி என்று செய்து அலுத்து விட்டதா? அடுத்த முறை டிபன் செய்யும்போது இந்த சட்னியை செய்து பார்த்து ருசியுங்கள். வித்தியாசமான சுவையுடன் சத்தும் நிறைந்தது. இதனை சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

கலாக்காய் ...
கலாக்காய் ...

ஹெல்தி & டேஸ்ட்டி கலாக்காய் சட்னி:

கலாக்காய் 2 கைப்பிடி 

உப்பு தேவையானது 

தேங்காய் துருவல் 1/2 கப் 

உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன் 

கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்

மிளகாய் வற்றல் 4 

கருவேப்பிலை சிறிது

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் எந்த வித வண்ணங்களில் உடை அணிந்தால் இதமாக இருக்கும் தெரியுமா?
ஆவாரம் பூ சூப்

கலாக்காய் மிகவும் புளிப்புச் சுவை மிகுந்தது. இதனை இரண்டாக நறுக்கி நடுவில் உள்ள கொட்டையை நீக்கிவிடவும். வாணலியில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு சிறிது எண்ணெய் விட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் கலாக்காய்களையும் போட்டு இரண்டு நிமிடம் தோலின் நிறம் மாறும் வரை வதக்கவும். இப்பொழுது இத்துடன் தேவையான அளவு உப்பு, தேங்காய் துருவல், சிறிது கருவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்க சூப்பரான கலாக்காய் சட்னி தயார்.

இரும்பு சத்து, விட்டமின் சி, பொட்டாசியம், ஜிங்க், காப்பர் என ஏகப்பட்ட சத்துக்கள் மிகுந்தது. பித்தம் போக்கும். பசியை தூண்டக்கூடியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com