இன்றைய இளைய தலைமுறையின், இனிய நண்பன் இவன்தான்!

ஏர் ஃப்ரையர்
ஏர் ஃப்ரையர்www.bbcgoodfood.com

து ஒரு புதிய வகையான சமையல் அறை சாதனமாகும். இந்த கருவியானது சூடான காற்றை மட்டுமே பயன்படுத்தி சமைக்க  உதவுகிறது. குறைந்த அளவு வெப்பத்தை மட்டுமே பயன்படுத்துகின்றது. இந்தக் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் உணவை டீப் ப்ரயிங் செய்யும்போது நாம் பயன்படுத்தக்கூடிய எண்ணெயின் அளவு 70 முதல் 80 சதவிகிதம் குறைகிறது. இவ்வாறு குறைந்த அளவிலான எண்ணெய்  பயன்பாடு, நமது உணவுப்பொருளையும் ஆரோக்கியமாக்குகிறது.

ஆம். தற்போது இந்த ஏர் ஃப்ரையர்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார்போல் காலப்போக்கில் மக்களும் மாற்றத்தைத் தேடியேதான் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே, நமது சமையலறையில் புதுவித மாற்றத்தை ஏற்படுத்தி வரும் இந்த ஏர் ஃப்ரையரின் நன்மைகள் பற்றி அறிந்து நாமும் பயன்படுத்துவோம்! பயன் பெறுவோம்!

நன்மைகள்:

1. குறைந்த அளவிலான எண்ணெய் பயன்பாடு உடலுக்கு நன்மை அளிக்கும். அந்த வகையில் பொறித்த உணவுகளை சமைக்க சிறந்த வழி இந்த ஏர் ஃப்ரையர்தான். இதில் எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தி சமைக்க பயன்படுத்துவதால் ஆரோக்கியமற்ற உணவும்கூட ஆரோக்கியமாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 2.  இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. நன்றாக எண்ணெயில்  வறுத்த உணவுகளில் அதிகளவிலான கொழுப்புகள் இருக்கும். கட்டாயம் வருக்க அல்லது பொறிக்க வேண்டிய பொருட்களை ஏர் ஃப்ரையரின் உதவியால் சமைக்கும்பொழுது நாம் கொழுப்பு குறைந்த உணவை உட்கொள்ளலாம்.

3. பொதுவாகவே ஏர் ஃப்ரையர்கள் உதவியுடன் சமைப்பதன் மூலம் நமக்கு நம்முடைய உணவில் ஒரு மொறுமொறுப்பான தன்மை கிடைக்கும்.

 4.  எண்ணெய் அல்லது எண்ணெய்ப் பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு சமைக்கும்பொழுது சூடான வெப்பநிலை இருக்கும். அதோடு எண்ணெய் நம் மேலிலோ சமையல் மேடையின் மீதோ தெரித்து விழுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த ஏர் ஃபிரையர் சமையலறையின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

ஏர் ஃப்ரையர்...
ஏர் ஃப்ரையர்...www.philips.co.uk

5. டீப் ஃப்ரையர்களோடு ஒப்பிடும்பொழுது ஏர் ஃப்ரையர்கள் உணவுப்பொருட்களின் அதிகளவிலான சத்துக்களைத் தக்க வைத்துக்கொள்கிறது. அதனால், சமைக்கும்போது குறைந்த வெப்ப வெளிப்பாடு வைட்டமின்கள் மற்றும் தாதுகளைப் பாதுகாக்க உதவுகின்றன.

6.  இது நமது சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

எவ்வாறு இயங்குகிறது?

ர் ஃப்ரையர் முதலில் அதில் இருக்கும் ஹீட்டரை பயன்படுத்தி வெப்பக் காற்றை உண்டு செய்யும்.  தேவையான அளவு வெப்ப காற்று கிடைத்ததும் ஹீட்டர் தானாகவே அணைந்துகொள்ளும்.  பிறகு அந்த வெப்ப காற்றின் வெப்ப அளவானது குறைந்து மீண்டும் அதுவாகவே ஆன் செய்துகொள்ளும். இதனால் நாம் அருகில் இருந்து சமைக்க வேண்டிய தேவை இல்லை. நீங்கள் சமைக்க வேண்டிய பொருட்களை உள்ளே ஏர் ஃப்ரையருக்குள் வைத்துவிட்டு ஆன் செய்தால் மட்டுமே போதும். அதுவாகவே நமக்கு சமைத்து தரும். சமையல் முடிந்ததும் ஏர் ஃப்ரையரில் உள்ள அலாரம் ஓசை எழுப்பும். எனவே, அதன்மூலம் சமையல் முடிந்து விட்டதை நம்மால் அறியமுடியும்.

நீங்கள் இதில் காய்கறிகள் சமைக்கிறீர்கள் என்றால் அதனை நன்றாக வேகவைக்க ஐந்து நிமிடங்கள் மட்டுமே போதும். ஆனால், அதுவே இறைச்சியாக இருந்தால் நன்றாக வேகவைக்க கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தேவைப்படுகின்றன.

எந்த ஒரு சமையலாக இருந்தாலும் சரி ஏறக்குறைய இருபது நிமிடத்திற்குள்ளே இந்த ஏர் ஃப்ரையர் மூலம் நாம் சமைத்து முடித்துவிடலாம். இந்த 20 நிமிடம் சமைக்க அது எடுத்துக்கொள்ளும் மின்சாரத்தின் அளவு வெறும்  0.25 யூனிட்டுகள் மட்டுமே ஆகும்.

ஏர் ஃப்ரையரின் வடிவம்:

ர் ஃப்ரையர்கள் அறிமுகமான நாட்களில் இருந்த மாடலில் ஒரு சிறிய குடும்பத்திற்கு மட்டுமே உணவை சமைக்கும் வடிவத்தில் அமைந்திருந்தது. ஆனால், இப்பொழுது வந்திருக்கும் இந்த அவன் மாடலில் ஒரு பெரிய குடும்பத்திற்கு உணவை சமைக்கும் அளவிற்கு மிகவும் விசாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ர்ஃப்ரையரின் கதவு கண்ணாடியால் செய்யப்பட்டு மேலிருந்து கீழ் இழுத்துத் திறப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவை திறப்பதற்கு எளிதாக்கும் விதமாக உறுதியான கைபிடியும் பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மிரள வைக்கும் கொனார்க் சூரிய கோயிலின் அதிசயங்கள்!
ஏர் ஃப்ரையர்

ஏர்ஃப்ரையரின் உட்புறம் தகுந்த இடைவெளியில் சமைக்கும் பொருட்களை வைத்துக்கொள்வதுபோல சதுர வடிவத்தில் இரண்டு தட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாம் பொரிக்க வேண்டிய காய்கறிகளை வைத்துக்கொள்ளலாம்.

இந்த இரண்டு தட்டுகளுக்குக் கீழே ட்ரிப்பிங் ட்ரே உள்ளது. இது மேலே வைக்கப்பட்ட தட்டிலிருந்து ஒழுகும் மாசாலா உணவுத்துகள் மற்றும் எண்ணெயை இந்தத் தட்டில் வந்து சரிவர சேர்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட சுழலக்கூடிய கூடை ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, முழுவதுமாக ஒரு அடக்கமான அவன் போன்று சிறிய வடிவில் தோற்றமளிக்கிறது.

ஏர்ஃப்ரையரின் விலை மற்றும் பிரபல பிராண்டுகள்:

ரு நல்ல ஏர்ஃப்ரையரின் விலையானது சராசரியாக மூவாயிரம் ரூபாயில் இருந்தே துவங்குகிறது. பிரபல எலக்ட்ரிக் சாதன உற்பத்தி நிறுவனங்களான பிலிப்ஸ், பிரஸ்டீஜ், ஜியோமி போன்ற நிறுவனங்கள் அந்தந்த விலை மற்றும் மாடல்களுக்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து வருகின்றனர். கடைகளில் மட்டுமின்றி ஆன்லைனிலும் கூட ஏராளமான மாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com