
தேவையான பொருட்கள்:
பிரட் - 6
உருளை கிழங்கு – 3
வெங்காயம் -1
தயிர் 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் -1
இஞ்சி துருவல் -1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் பொடி -2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி, ஆம்சூர் பொடி - தலா 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி -1/2 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - 1 கைப்பிடி
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம். பச்சை மிளகாய் இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு பதமாக வேக வைத்து உதிர்க்கவும். ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானாதும் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு பச்சை மிளகாய் . உருளைக்கிழங்கை சேர்க்கவும். சிறிது வதங்கியவுடன் இஞ்சி துருவல். மேலே கொடுத்துள்ள பொடிகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி உப்பு . மல்லித் தழை சேர்க்கவும்.
ஒரு தவாவை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். பிரட்டை ஒரு மூடியை வைத்து வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ளவும். வட்டமாக நறுக்கிய பிரட்டின் ஒரு பக்கம் சிறிது ஆலு கலவையை பிரட் முழுவதுமாக தடவி சூடான எண்ணெயில் போடவும். அந்த பிரட்டின் மேல் புறத்தில் நன்கு பீட் செய்த தயிரை ஒரு ஸ்பூனால் பரவலாக தடவி பின் ஒரு மூடியால் மூடவும். அடுப்பை நிதானமான தீயில் வைத்து பிரட்டின் அடிப்புறம் உள்ள ஆலு கலவை நன்கு டோஸ்ட் ஆனவுடன் எடுத்து பரிமாறலாம். இந்த பிரட் டோஸ்ட் இட்லி மேலே சாஃப்டான வெண்மையான இட்லியாகவும் மறுபுறம் மொறு மொறுப்பாக கிரிஸ்பியான ஆலு டோஸ்ட்டாகவும் நல்ல டேஸ்டாக இருக்கும்.