அசர வைக்கும் சுவையில் ஆல்மண்ட் மில்க் புட்டிங்!

ஆல்மண்ட் மில்க் புட்டிங்...
ஆல்மண்ட் மில்க் புட்டிங்...pixabay.com

ந்த கோடைக்காலத்திற்கு ஏற்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான இனிப்புதான் ‘ஆல்மண்ட் மில்க் புட்டிங்.'

இதை செய்வதற்கு முட்டையோ, பாலோ தேவையில்லை. வீட்டிலே இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக செய்து முடித்து விடலாம். ஆனால் சுவை வேற லெவலில் இருக்கும். இப்போ வாங்க ஆல்மண்ட் மில்க் புட்டிங் எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

ஆல்மண்ட் மில்க் புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்:

ஆல்மண்ட் மில்க்- 2 கப்.

சக்கரை- ½ கப்.

வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்- 5 சொட்டுக்கள்.

கொக்கோ பவுடர்-  ½ கப்.

சோளமாவு- 2 தேக்கரண்டி.

ஆல்மண்ட் மில்க் புட்டிங் செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில் ஆல்மண்ட் மில்க் 2கப் சேர்த்து அத்துடன் சர்க்கரை ½ கப், கொக்கோ பவுடர் ½ கப், வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட் 5 சொட்டுகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி வைத்து கொள்ளவும். இப்போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இந்த கலவையை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இப்போது ஒரு சின்ன பவுலில் சோளமாவு 2 தேக்கரண்டி சேர்த்து அத்துடன் தண்ணீர் சிறிது சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலக்கவும். பிறகு அதை கொதிக்கும் ஆல்மண்ட் மில்க் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

அடுப்பை மிதமான சூட்டிலேயே வைத்து 5 நிமிடம் நன்றாக கிண்டவும். இப்போது ஆல்மண்ட் மில்க் கலவை நன்றாக கட்டியாக ஆரம்பிக்கும்.

அப்போது அடுப்பை நிறுத்தி விட்டு அதை அப்படியே ஒரு பாத்திரத்தில் மாத்தி 10 நிமிடம் ஆற விட்டு பிறகு பிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். இப்போது சுவையான ஆல்மண்ட் மில்க் புட்டிங் தயார்.

ஆல்மண்ட் மில்க் உடலுக்கு மிகவும் நல்லதாகும். எலும்பு வலுப்பெறுவதற்கு உதவுகிறது. இதை குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆல்மண்ட் மில்க் எல்லா சூப்பர் மார்க்கெட் கடைகளிலும் கிடைக்கும். அப்படியில்லை என்றால், 20 பாதாமை நன்றாக ஊறவைத்து தோல் நீக்கி விட்டு அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இதையும் கடையில் வாங்கிய ஆல்மண்ட் மில்க்கிற்கு பதிலாக பயன்படுத்தலாம் நன்றாகவே இருக்கும். இந்த ஆல்மண்ட் மில்க் புட்டிங்கை வீட்டில் ஒருமுறை செய்து பாருங்களேன், அப்பறம் தினமும் செய்து தர சொல்லி வீட்டில் எல்லோரும் அடம் பிடிப்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com