சப்பாத்தி மிஞ்சிருச்சா? கவலை வேண்டாம்.. சப்பாத்தியில் லட்டு செய்ய அசத்தலான டிப்ஸ்..!

சப்பாத்தி மிஞ்சிருச்சா? கவலை வேண்டாம்.. சப்பாத்தியில் லட்டு செய்ய அசத்தலான டிப்ஸ்..!
Published on

பொதுவாகவே மீந்து போன சோறில் தான் நமக்கு பல ரெசிபிகள் செய்ய தெரியும். ஆனா மீந்து போன சப்பாத்தியீலும் பல ரெசிபிகள் செய்ய முடியும் அதை பற்றி இதில் பார்க்கலாம். இப்போ எல்லாம் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக, வட இந்தியர்களின் உணவான சப்பாத்தியை தமிழகத்தில் அதிகமானோர் சாப்பிட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் முதல் நாள் வைத்த சப்பாத்தி மீந்து போனால் அது காய்ந்த நிலையில் மாறிவிடுகிறது. இதனால் பலரும் சப்பாத்தியை குப்பையில் தான் வீசுகின்றனர். இனி அந்த கவலை வேண்டாம் மீந்து போன சப்பாத்தியில் சூப்பரான லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்..

பொதுவாகவே லட்டு பிடிக்காதவர்கள் யாருமே இல்லை. திருப்பதி லட்டுக்கு கூட அடித்து பிடித்து ஓடுபவர்களே அதிகம். அப்படிப்பட்ட லட்டுவை நாம் சப்பாத்தியை கொண்டு செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க. இந்த லட்டுவை எடை குறைக்க விரும்புவோர் கூட சாப்பிடலாம்

சப்பாத்தியில் லட்டு செய்ய தேவையான பொருள்கள்

மீந்துபோன சப்பாத்தி - 6

நெய் - 4 ஸ்பூன்,

பால் - 4 ஸ்பூன்,

பால் பவுடர் - 3 ஸ்பூன்,

நாட்டுச் சர்க்கரை - கால் கப்,

ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்,

செய்யும் முறை

முதலில் சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் பொடித்த சப்பாத்தியைச் சேர்த்து வதக்குங்கள். இதில் எடுத்து வைத்திருக்கும் பாலை தெளித்து கொஞ்சம் ஈரமாக்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக பால் பவுடரையும நாட்டுச் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றையும் நன்கு கிளறி இறக்கி வையுங்கள். இதோடு நீங்கள் நட்ஸ் வகைகளையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

மீதமுள்ள நெய்யையும் சூடாக்கி இந கலவையில் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான சப்பாத்தி லட்டு ரெடி. வீடுகளில் செய்து பாருங்கள். வழக்கமாக, மசாலா மற்றும் குருமாவுடன் சப்பாத்தியை சாப்பிட்டவர்களுக்கு, சப்பாத்தி லட்டு வித்யாசமான சுவையில் எளிதில் அவர்களை கவர்ந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com