
சாத்துக்குடி ஊறுகாய்
தேவை:
சாத்துக்குடி - 6
மிளகாய்த் தூள்-2 ஸ்பூன்
உப்பு - 2 ஸ்பூன்
வினிகர்-1 ஸ்பூன்
செய்முறை:
குக்கரில் சாத்துக்குடியைச் சின்னத் துண்டுகளாக வெட்டிப் போட்டு வினிகரைச் சேர்த்து ஒரு விசில் விடவும். குக்கர் ஆறிய பிறகு மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். இது சிறிது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருப்பதால் வித்தியாசமாக இருக்கும்.
******
க்ரீன் ஆப்பிள் ஊறுகாய்
தேவை:
க்ரீன் ஆப்பிள் - 1 மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன் ,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
க்ரீன் ஆப்பிளை விதைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும். ஆப்பிள் துண்டுகளுடன் எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் கலந்து பரிமாறவும்.
*****
அன்னாசிப் பழ ஊறுகாய்
தேவை:
அன்னாசிப் பழத் துண்டுகள் - ஒரு கப்,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
கடுகு, வெந்தயப் பொடி - தலா ஒரு ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 100 கிராம், பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்.
செய்முறை:
பைனாப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பெருங்காயம் தாளித்து, பைனாப்பிள் துண்டுகள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கடுகு , வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். பிறகு, எலுமிச்சை சாறு ஊற்றி கிளறவும். சுவையான அன்னாசி ஊறுகாய் ரெடி.
******
கொய்யா ஊறுகாய்
தேவை:
கொய்யாக்காய் (பெரியது) - 2,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
கடுகு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன், லெமன் சால்ட் - சிறிதளவு.
செய்முறை:
கொய்யாவை வேகவிட்டு, ஈரம் போக துடைத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, கொய்யா துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, லெமன் சால்ட் சேர்த்துக் கலந்து இறக்கினால், சுவையான, சத்தான கொய்யாக்காய் ஊறுகாய் ரெடி.