ஆந்திரா ஸ்பெஷல் ஆவக்காய் ஊறுகாய்!

Avakai Pickle
Avakai Pickle
Published on

தேவையானவை:

  • புளிப்பு மாங்காய் - 1 கிலோ

  • கல் உப்பு - 200 கிராம்

  • மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்

  • காரப்பொடி - 200 கிராம்

  • கடுகு பொடி - 200 கிராம்

  • வெந்தயம் - 1 ஸ்பூன்

  • பெருங்காயப் பொடி - 1 ஸ்பூன்

  • நல்லெண்ணெய் - 200 கிராம்

செய்முறை:

ஆவக்காய் மாங்காய்க்கு 5 கப் காய்க்கு ஒரு கப் உப்பு, காரப் பொடி, கடுகுப் பொடி அவசியம் போடவும். 5:1 அளவு சரியாக இருக்கும்.

கெட்டியான புளிப்பு மாங்காயாக ஒரு கிலோ வாங்கி அலம்பி ஈரம் போகத் துடைத்து விடவும். கொட்டையை எடுத்துவிட்டு ஓட்டுடன் நறுக்கவும். கடுகை வெறும் வாணலியில் சூடு பண்ணி (பொரிய வேண்டாம்) அத்துடன் வெந்தயம் 1 ஸ்பூன் சேர்த்து பொடித்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய் துண்டுகளை போட்டு கல் உப்பு, மஞ்சள் தூள் போட்டு கலக்கவும். அதில் காரப்பொடி, கடுகு பொடி, பெருங்காய பொடி சேர்த்து நல்லெண்ணையை நன்கு சுட வைத்து ஆறியதும் கொட்டி கலந்து விடவும்.

Avakai Pickle
Avakai Pickle

தினமும் இரு முறை மரக்கரண்டி கொண்டு கிளறி விடவும். ஐந்தாறு நாட்களில் மாங்காய் உப்பு காரம் பிடித்து நன்கு ஊறி இருக்கும். இதனை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். ஆவக்காய் ஊறுகாயின் மண்டியை (கசண்டு) ஒரு ஸ்பூன் எடுத்து சூடான சாதத்தில் போட்டு சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

ஒரு வருடம் ஆனாலும் கெடாத சுவையான ஆவக்காய் ஊறுகாய் தயார்.

இதையும் படியுங்கள்:
அறுசுவை நிறைந்த 5 மாங்காய் ஊறுகாய்கள்!
Avakai Pickle

குறிப்பு:

நல்லெண்ணையை பச்சையாக விடக்கூடாது. சிக்கு வாடை வந்து விடும். நல்லெண்ணெயை சுட வைத்து ஆறியதும் விடவும்.

கடுகுப் பொடி, வெந்தயப்பொடி, நல்லெண்ணெய் மூன்றுமே நல்ல மணத்தையும், ருசியையும் கொடுப்பதுடன் ஊறுகாய் கெடாமல் சிறந்த பிரசர்வேட்டிவாகவும் செயல்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com