

வேப்பம்பூ பிரியாணி
தேவை:
பாசுமதி அரிசி – 1 கப்
வேப்பம்பூ (உலர்ந்தது) – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீள வாக்கில் நறுக்கியது)
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
மிளகு – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1¾ கப்
கொத்தமல்லி, புதினா இலை – சிறிதளவு
செய்முறை:
ஒரு வாணலியில் நெய் ஊற்றி வேப்பம்பூவை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். அதே வாணலியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வறுக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் மஞ்சள் தூள், உப்பு, வறுத்த வேப்பம்பூ, கொத்தமல்லி, புதினா சேர்த்து கலக்கவும். தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்; பிறகு அரிசியை சேர்த்து மூடி வேகவைக்கவும்.
அரிசி வெந்ததும் நெய் சிறிது மேலே ஊற்றி கலக்கவும். சுவையான, சத்தான வேப்பம் பூ பிரியாணி ரெடி.
ஆரஞ்சு பிரியாணி
தேவை:
ஆரஞ்சு பழம் - 5
பாஸ்மதி அரிசி - 1 கப்வெங்காயம் - 3
புதினா இலை - 1 கைப்பிடி
கேரட் - 2
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். கேரட்டை துருவி கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை நறுக்கி கொள்ளவும். அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.ஆரஞ்சு பழங்களை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மிளகாய் தூள் புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து வதக்கவும். இதனுடன்
ஆரஞ்சு சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும்.ஊற வைத்த அரிசி மற்றும் உப்பு சேர்த்து மூடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் குக்கரை திறந்து கிளறிவிட்டு துருவிய கேரட் சேர்த்து மீண்டும் குக்கரை மூடி 10 நிமிடங்கள் தம்மில் போடவும். சுவையான ஆரஞ்சு பிரியாணி ரெடி.
இளநீர் பிரியாணி
தேவை:
பாசுமதி அரிசி – ஒரு கப்
நெய், முந்திரி, திராட்சை – தலா இரண்டு டீஸ்பூன்
இளநீர் – ஒரு கப்
இளநீர் வழுக்கை (ஒன்றிரண்டாக அரைத்தது) – ஒரு கப்
மில்க்மெய்ட் – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
பாசுமதி அரிசியை பதினைந்து நிமிடம் ஊறவிடவும்.
முந்திரி, திராட்சை நெய்யில் வறுக்கவும். குக்கரில் அரிசியை சேர்த்து இளநீர், அரைத்த இளநீர் வழுக்கை, மில்க்மெய்ட் ஆகியவற்றை ஊற்றி, உப்பு சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். சுவையான இளநீர் பிரியாணி ரெடி.
சுண்டைக்காய் பிரியாணி
தேவை:
பாசுமதி அரிசி,
பிஞ்சு சுண்டைக்காய் - தலா ஒரு கப்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
பூண்டு - 5 பல்,
எண்ணெய் - 3 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
அரைத்துக்கொள்ள:
துருவிய தேங்காய் - கால் கப்,
பச்சை மிளகாய் - 2,
நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை (சேர்த்து) - அரை கப், தக்காளி - ஒன்று,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
வறுத்துப் பொடிக்க:
பிரிஞ்சி இலை - ஒன்று,
சோம்பு, ஏலக்காய், கிராம்பு எல்லாம் சேர்ந்து - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வறுக்கக் கொடுத்துள்ள பொருட் களை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு நீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பாசுமதி அரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, ஒன்றரை கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சுண்டைக் காய்களை வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, நசுக்கிய பூண்டு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து அரை கப் நீர் விட்டு வேகவிடவும்.
வெந்து, பச்சை வாசனை போனதும், சுருள வதக்கி... வறுத்துப் பொடித்த பொடி சேர்த்து இறக்கவும். இதில் வெந்த சாதத்தை போட்டுக் குழைந்து விடாமல் கிளறி, பரிமாறவும். அல்டிமேட் சுவையில் சுண்டைக்காய் பிரியாணி ரெடி.