Tomato Sauce அதிகம் விரும்பி உண்பவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்குத்தான்!

தக்காளி சாஸ்...
தக்காளி சாஸ்...pixabay.com

ன்றாட உணவின் சுவைக்கு இன்னும் ஒருபடி அதிகளவு சுவையைத் கூட்டும் உணவுப்பொருளாகவே பெரும்பாலானோரின் சமையலறையில் மாறிவருகிறது இந்த தக்காளி சாஸ். நவீன உலகத்தில் வீட்டின் பெரியவர்கள் முதல் சிறிவர்கள் வரை இந்த தக்காளி சாஸின் ருசிக்கு  பலரும் அடிமையாகி இருக்கின்றனர்.

நூடுல்ஸ், சப்பாத்தி, சமோசா ஃப்ரன்ஜ் ப்ரைசில்  துவங்கி சமையலறையில் அன்றாட சமையலில் சுவையை கூட்டுவதற்காகவும் தக்காளி சாஸ் தற்போது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் தக்காளி சாஸ் இல்லாத சமையலறையின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. அந்த வகையில் தக்காளி சாஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அது நம்முடைய உடலுக்கு நல்லதா? அதனால் என்னென்ன பிரச்னைகளெல்லாம் உடலில் ஏற்படும் என்பது குறித்து பார்ப்போமா?

தக்காளி சாஸ் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தக்காளி சாஸில் பூஜ்ய அளவிலான சத்துதான் இருக்கிறது என்பதே உண்மை. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளைங்களில் தக்காளி சாஸ் தயாராகும் தொழிற்சாலையில் எந்த நிலையில் சாஸ் உற்பத்தியாகிறது என்பது குறித்த வீடியோ மக்களிடையே வைரலானது. அதில் கெட்டுப்போன தக்காளிகளைப் பயன்படுத்தி சாஸ் தயாரிக்கப்படுவது போல காண்பிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொழிற்சாலைகளில் அழுகிய தக்காளி, மேலும் அது குறைந்த நாட்களுக்குள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக வெவ்வேறு விதமான  இரசாயனப் பொருட்கள், சர்க்கரை, உப்பு, கார்ன் சிரப், ஃபிரக்டோஸ் மற்றும் வேறு சில பதப்படுத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.  

பதப்படுத்த மட்டுமின்றி உணவின் சுவையைக் கூட்டி நுகர்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும்  இந்த உணவுப்பொருளானது தொழிற்சாலைகளில்  தரமற்ற நிலையில்  ஒவ்வொரு நாளும்  தயாரிக்கப் படுகிறது.

உடலில் தீங்கை ஏற்படுத்தும் தக்காளி சாஸ்:

இரசாயனங்கள் நிறைந்த அதிக நாட்கள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளான இந்த தக்காளி சாஸில் என்னென்ன பொருட்கள் சேர்க்கபடுகின்றன அது நம்முடைய உடலுக்கு எந்த மாதியான கேடுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து வரிசையாக..

·தக்காளி:

தக்காளி சாஸ் தயாரிக்கும்போது நிறையளவிலான  தக்காளியின் விதைகள் மற்றும் தோல்கள்  அகற்றப்பட்டு தக்காளியின் சாறானது  வடிகட்டப்படுகிறது. பின்னர் மிக அதிகமான வெப்பநிலையில் மீண்டும் சமைக்கப் படுகிறது. இது பல மணி நேரங்களுக்கு மேல் நடை பெறுவதால் தக்காளியின் அனைத்து வைட்டமின் சத்துகளும் தாதுக்களும் நீக்கப்படுகிறது.

·உயர் பிரக்டோஸ் சோளம் சிரப்:

தக்காளி சாஸின் ஒரு  முக்கிய மூலப்பொருள் தான் உயர் பிரக்டோஸ் சோளம் சிரப் ஆகும். இது நம்முடைய உடலுக்கு ஆரோக்கியமற்றது மற்றும் நச்சுத்தன்மை கொண்டது. உயர் பிரக்டோஸ் சோளம் சிரப் என்பது மரபணு மாற்றப்பட்ட சோளத்தில் இருந்து தயாரிக்கப் படுகிறது. இதில் சேர்க்கப்படும் சோளம் சிரப் நம்முடைய இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

தக்காளி சாஸ் தயாரிக்கும்போது...
தக்காளி சாஸ் தயாரிக்கும்போது...pixabay.com

·வினிகர் மற்றும் சர்க்கரை:

தக்காளி சாஸில் சேர்க்கப்படும் இந்த வினிகர் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கானது. இது ஜிஎம்ஓ சோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் உருவாகிறது. எனவே தக்காளி சாசை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்தை சீர்குலையச் செய்யும்.

வீட்டிலேயே தக்காளி சாஸ் செய்து சாப்பிடலாமா?

இது போன்ற தரமில்லாத தக்காளி சாஸ் வெளியில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இனி வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடலாமே? இப்போது வீட்டில் எவ்வாறு ஆரோக்கியமான தக்காளி சாஸ் தயார் செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் அதற்குத்  தேவையான பொருட்கள்:

 ·       தக்காளி - ஒரு கிலோ

·       மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

·       சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்

·       உப்பு - அரை டீஸ்பூன்

·       இஞ்சி - சிறு துண்டு

·       பூண்டு - 3 பல்

·       பட்டை – சிறிதளவு

·       கிராம்பு – சிறிதளவு

·       எலுமிச்சைப் பழச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்

இதையும் படியுங்கள்:
கை, கால்கள் மரத்துப்போவதன் காரணம் தெரியுமா?
தக்காளி சாஸ்...

ஆரோக்கியமான தக்காளி சாஸ் செய்யும் முறை:

முதலில் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் தக்காளி, மிளகாய்த் தூள், உப்பு, சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து வேக விடவும். பின்னர் வெந்த தக்காளியை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி விழுதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீதமுள்ள சர்க்கரையைச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக தொடர்ந்து கிளறவும். சாஸை ஒரு தட்டில் சிறிதளவு ஊற்றினால், அதன் தன்மையானது  ஒட்டாமல் கெட்டியாக இருக்க வேண்டும். இந்த பதம் வந்தவுடன் பிறகு அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி ஜாடியில் ஊற்றி மூடி வைக்கவும். சுவையான இரசாயனக் கலவையற்ற தக்காளி சாஸ் தயார்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com